சமீப காலமாக பெண்கள் பிரச்சனையில் பலமாக சிக்கி வருகிறார் ஆர்யா. ஒரு காலத்தில் பிளேபாய் என்றால் சந்தோசமாக வரவேற்ற ஆர்யா தற்போது பிளேபாய் என்றாலே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறாராம்.
அந்த அளவுக்கு அவருக்கு பெண்கள் பிரச்சினை தொடர்ந்து வலுத்துக் கொண்டே இருக்கிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 16 பெண்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அப்போதே பல சர்ச்சைகளை கூட்டினாலும் பின்னர் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்னதி என்ற பெண் தற்போதுவரை ஆர்யா தான் என்னுடைய கணவர் என நினைத்து வாழ்வதாக அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. சமீபத்தில் தன்னுடைய திருமண நாளை கொண்டாடிய ஆர்யாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் ஆர்யா அவருடைய அம்மாவுடன் சேர்ந்து கொண்டு 80 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக செய்திகள் வெளியானது.
தற்போது அதனை தொடர்ந்து ஈழத்து பெண் ஒருவரை ஆர்யா பணத்துக்காக மிரட்டியுள்ள செய்தி காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்தப் பெண்ணுக்கு ஆர்யா செய்த மெசேஜ் மற்றும் ஆடியோ போன்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இவ்வளவு நாட்கள் ஒன்றும் தெரியாதவர் போல் வலம் வந்து கொண்டிருந்த ஆர்யாவை வம்பில் மாட்டிவிட்டுள்ளது ஆர்யாவை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் பல தயாரிப்பாளர்களையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இது குறித்து ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் மேலும் அவருக்கான பிரச்சனைகள் வலுத்துக் கொண்டேதான் செல்லும் என அவருடைய நலம் விரும்பிகள் தொடர்ந்து அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.