ஆர்யா நடிப்பில் வெளிவந்த சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு சொல்லும் படியாக வேறு எந்த படமும் இவருக்கு சரியாக அமையவில்லை. அத்துடன் கடந்த வருடம் இவர் நடித்த கேப்டன் படம் மொக்கையான விமர்சனத்தை பெற்றது. அடுத்து நடித்த இரு படங்களிலும் கேமியோ தோற்றத்தில் மட்டும் நடித்துக் கொடுத்தார். ஆனால் அதுவும் இவருக்கு கைகொடுக்கவில்லை.
இதனை அடுத்து நேற்று வெளியான காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை என்றால் இவருடைய சினிமா கேரியர் என்னவாகும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும்.
Also read: வளரும்போது கேரியரையே தொலைத்த ஆர்யா.. உப்புமா படத்தால் நொந்து நூடுல்ஸான சார்பட்டா கபிலன்
ஆனாலும் சினிமாவில் இது சாதாரணமான ஒரு விஷயம் தான். ஏற்றும் இறக்கம் எல்லாரும் கடந்து தான் ஒரு நல்ல நிலைமைக்கு அடைந்து வந்திருக்கிறார்கள். அதுபோல ஆர்யாவும் இதையெல்லாம் தாண்டி வெற்றி நாயகனாக வாகை சூடுவார். ஆனால் இவர் சினிமாவிற்கு ஆசைப்பட்டு ஒண்ணும் வரவில்லை.
சும்மா கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யா, பக்கத்தில் சூட்டிங் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அதை பார்ப்பதற்காக போயிருக்கிறார். அப்பொழுது இவருடைய துருதுருவான பேச்சும் செயலும் இயக்குனர் கண்ணில் பட்டு அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதன் பின்னரே ஹீரோவாக ஆனார்.
Also read: சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்ட பாக்குறீங்களா ஆர்யா? ஓப்பனாக பதிலடி கொடுத்த காதர் பாட்சா
இவர் நடித்த முதல் படமான அறிந்தும் அறியாமலும் படத்தில் மாஸாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் மூலம் ரசிகர்கள் மனதில் வெகுவாக இடம் பிடித்தார். அதன்பின் உள்ளம் கேட்குமே என்ற படத்தில் காலேஜ் ஸ்டூடண்டாக அறிமுகமானார். இதில் அசின், ஆர்யா, ஷியாம், பூஜா போன்ற நட்சத்திரங்கள் வளர்ந்து வருவதற்கு காரணமாக அமைந்த படமும் உள்ளம் கேட்குமே.
இந்தப் படத்தின் மூலம் அப்பொழுது காலேஜ் படிக்கும் இளசுகள் ஆர்யாவை பார்த்து சொக்கி போய் இருந்தார்கள். அதிலும் இவரின் கண் ஒரு பூனைக்கண் போல் பார்ப்பதற்கு இருக்கும். இதற்காகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை பார்த்து ரசித்தார்கள். இவர் நடித்த இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
Also read: பருத்திவீரனைப் போல் களம் இறங்கும் ஆர்யா.. கதை செல்லும் போதே கண்ணீர் விட்டு அழுத சம்பவம்