தொடர்ந்து சொதப்பி வந்த ஆர்யாவுக்கு மீண்டும் சினிமாவில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது மகாமுனி தான். படம் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட் அடித்தது.
மௌனகுரு என்ற படத்தை இயக்கிய சாந்தகுமார் பத்து வருடங்கள் கழித்து இயக்கிய படம் மகாமுனி. ஒரு கதைக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை மகாமுனி படத்தில் பிரதிபலித்திருப்பார்.
ஒவ்வொரு வசனங்களும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை உச்சி குளிர வைத்தது. அந்த படத்திற்கு பிறகு ஆர்யாவின் சினிமா மார்க்கெட் மீண்டும் பிக்கப் ஆகியுள்ளது.
அப்பேர்பட்ட படத்தை மிஸ் செய்த நடிகர் யார் தெரியுமா. நம்ம ஜாலி நடிகர் ஜீவா தான். இவர் ஜாலி நடிகர் மட்டுமல்ல, ராம் போன்ற சிறந்த நடிப்புக்கு உதாரணமான படங்களையும் கொடுத்தவர் தான்.
ஆனால் சமீபகாலமாக ஜாலியான படங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் சாந்தகுமார் கூறிய மகா முனி படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். மகா முனி படம் முழுக்க முழுக்க சீரியஸ் படமாக இருக்கும் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஆனால் படம் வந்து நல்ல முறையாக விமர்சனங்களை பெற்றதைப் பார்த்து ஜீவா கண்டிப்பாக இந்த படத்தை மிஸ் செய்து விட்டோம் என வருத்தப்பட்டிருப்பார். அதேபோல் ரசிகர்களும் ஆர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது எனக் கூறுகின்றனர்.