புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்ச்சை நடிகராக மாறிய ஆர்யா.. பறிபோகும் பட வாய்ப்பு

அரண்மனை 3, எனிமி போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஆர்யாவின் நடிப்பில் இதுவரை எந்த திரைப்படமும் வெளியாகவில்லை தற்போது இவர் கேப்டன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து இவருக்கு சில பட வாய்ப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் ஆர்யா தன்னை படங்களில் புக் செய்ய வரும் தயாரிப்பு தரப்பிடம் ஏதாவது ஒரு பிரச்சனையை செய்து பட வாய்ப்புகளை இழந்து வருகிறார். கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக நிறைய திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.

அதன் முதல் கட்டமாக அவர் ஆர்யாவை வைத்து கொம்பன் முத்தையா இயக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருந்தார். இது குறித்த பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றது. ஆனால் இடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஆர்யா, முத்தையாவை அழைத்துக் கொண்டு வேறு தயாரிப்பாளரிடம் சென்று விட்டார்.

இதனால் கமல், ஆர்யா கூட்டணியில் தயாராக இருந்த அந்த படம் ட்ராக் ஆனது. இதற்கு பின்னணியில் ஆர்யா எக்கச்சக்கமாக சம்பளம் கேட்டது தான் காரணமாக கூறப்படுகிறது. இதனால் அவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு பல தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு தயாரிப்பு தரப்பிற்கும் ஆர்யாவுக்கும் இடையில் மனஸ்தாபம் எழுந்துள்ளது. அதாவது இயக்குனர் நலன் குமாரசாமி ஆர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார். அந்த திரைப்படத்தை ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தான் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது.

ஆனால் ஆர்யாவுக்கும் அவர்களுக்கும் எழுந்த மன வருத்தத்தின் காரணமாக ஆர்யா அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நலன் குமாரசாமி தற்போது கார்த்தியை வைத்து அந்த திரைப்படத்தை இயக்க முடிவு எடுத்துள்ளார். இப்படி ஆர்யா திரும்பும் பக்கம் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை செய்து நல்ல பட வாய்ப்புகளை இழந்து வருகிறார்.

ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனத்திடம் பிரச்சனை செய்த ஆர்யா தற்போது மீண்டும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் பிரச்சனை செய்துள்ளது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே சென்றால் அவருக்கு இனிமேல் தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பது சந்தேகம்தான் என்று கோலிவுட்டில் பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

Trending News