ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வளரும்போது கேரியரையே தொலைத்த ஆர்யா.. உப்புமா படத்தால் நொந்து நூடுல்ஸான சார்பட்டா கபிலன்

ஆரம்ப காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளாமல் தற்பொழுது வாய்ப்பு இழந்து காணப்படுகிறார் ஆர்யா. சமீபத்தில் இவர் படம் ஏதும் வெளிவந்து ஹிட் கொடுக்காத காரணம் இதுதான் என்ற தகவல் கேட்பவரை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

2005ல் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் ஆர்யா. அவ்வாறு இவரின் சினிமா பயணம் ஆரம்ப காலகட்டத்தில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.

Also Read: தந்திரமாக கமலை பகடைக்காயாக யூஸ் பண்ணும் பிரபாஸ்.. இது தெரியாமல் வாண்டடா மாட்டிய உலக நாயகன்

அதிலும் குறிப்பாக அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, பட்டியல் போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி தன் கேரியரை ஸ்டார்ட் செய்தார். அதன்பின் 2009ல் பாலா இயக்கத்தில் பூஜா, ஆர்யா ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் நான் கடவுள்.

இப்படத்தில் ஏழாவது உலகம் என்னும் புனிதத்தை தழுவிய கதை இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இப்படம் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்று தந்தது. இப்படம் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாகவும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்தது.

Also Read: ஆழமாக அரசியல் பேசும் மாமன்னன்.. கமலுடன் கூட்டணி போடுவாரா உதயநிதி!

2010ல் எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் இவரும் சந்தானமும் சேர்ந்து அடித்த லூட்டி மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். அதை தொடர்ந்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் இவரின் நடிப்பு அசத்தலாக இருக்கும்.

அவ்வாறு இருக்க இவரின் வாழ்க்கையை புரட்டிப் போடும் விதமாக இவர் செய்த புது முயற்சியால் இன்று வரை தன் கேரியரை தொலைத்து நிற்கின்றார். புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பதாக எண்ணி இவர் மேற்கொண்ட சேட்டை, வேட்டை, சிக்கு புக்கு, ஓரம்போ போன்ற படங்கள் தோல்வியை தழுவியது.

Also Read: ஆடையை மாற்றுவது போல் 4வது காதலனை மாற்றும் விவாகரத்து நடிகை.. மும்பையில் உல்லாசமான வாழ்க்கை

இது போன்ற படங்களில் இவர் நடிக்காமல் இருந்திருந்தாலே நல்லா இருந்திருப்பார். இது போன்ற உப்புமா படங்களால் இவரின் பெயர் கெட்டது மட்டும் இல்லாமல் இன்று வரை சரிவர சினிமா வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். ஓரளவு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்திருந்தால் என்றோ இவர் சினிமாவில் டாப் ஹீரோ லிஸ்டில் இடம் பெற்றிருக்கலாம்.

Trending News