செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

ஓடிடி-யில் கூட விலை போகாத ஆர்யாவின் 5 படங்கள்.. சந்தானத்தை மலை போல் நம்பி இறங்க காரணம்

Actor Arya: தனக்கான அடையாளத்தை இன்று வரை தேடிவரும் நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். அவ்வாறு முன்னணி கதாநாயகனாக இவர் மேற்கொள்ளும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தற்பொழுது ஒரு வெற்றி வேண்டும் என இவர் செய்யப் போகும் காரியம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காண்போம்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற பல படங்களில் தன் நடிப்பினை வெளிக்காட்டிய இவர் இன்றும் தனக்கான அங்கீகாரத்தை பெறவில்லை என்பது வருத்தத்தை அளித்து வருகிறது.

Also Read: வெளிநாடுகளில் விஜய் இல்லாமல் வசூல் சாதனை படைத்த 7 தமிழ் படங்கள்.. போர் தொழில் மொத்த வசூலை மிஞ்சிய ரஜினி

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி தோல்வியை அடைந்தது. மேலும் இவரின் படங்கள் ஓ டி டி தளத்திலும் சரியான வரவேற்பு இல்லாமல் ஃபிளாக் அடைந்து வருகிறது.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற நடிப்பினை வெளிக்காட்டும் தன்மை கொண்ட இவர் மேற்கொள்ளும் முயற்சி தொடர் தோல்வியையே தந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற தொடர்ந்து தோல்வி முகத்தை காட்டி வரும் ஆர்யா ஒரு வெற்றி வேண்டும் என்பதற்காக, தனது வெற்றி படமான பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்து உள்ளார்.

Also Read: சூர்யாவுக்காக ரெண்டு தரமான சம்பவத்தை செய்ய போகும் லோகேஷ்.. ஹாலிவுட் அளவுக்கு எகிற போகும் மார்க்கெட்

சந்தானம் மற்றும் ஆர்யாவின் கூட்டணியில் நகைச்சுவை திரைப்படமாய், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின் எந்த படமும் இவருக்கு சரிவர கை கொடுக்கப்படாத  நிலையில் இப்படத்தின் இயக்குனரான ராஜேஷ் துணையோடு பாகம் 2வில் இறங்க உள்ளாராம்.

மீண்டும் இப்படத்தில் சந்தானமும் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. 13 வருடத்திற்கு பிறகு இரண்டாம் பாகத்தில் ஒன்று கூடும் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் இப்படம் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளார் ஆர்யா.

Also Read: ஜெயிலர் 4வது நாள் வசூலை பார்த்து இந்த வார ரிலீஸையும் தள்ளி போடும் திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை

- Advertisement -spot_img

Trending News