சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மகளாக இருந்து மாமனாருக்கு காரியம் செய்யும் பாக்கியா.. கோபியை மலைபோல் நம்பிய ஈஸ்வரி எடுத்த முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தாவின் மரணம் இந்த நாடகத்தை விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மிகவும் வருத்தமாகவும் இவர் ஒருத்தர் தான் கதாநாயகன் போல இந்த நாடகத்தை தூக்கி நிறுத்திட்டு வந்தார். அவருக்கு இப்படி ஒரு நிலைமையை கொடுத்துட்டீர்களே என்று ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனாலும் கிளைமாக்ஸ் நெருங்கிய நிலையில் கொஞ்சம் கதையை தூக்கலாக கொண்டு போக வேண்டும் என்பதற்காக தாத்தாவின் கதையை முடித்து விட்டார்கள். இந்நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் தாத்தாவை நினைத்து வருந்தும் பொழுது கோபி மற்றும் ராதிகா வந்து விடுகிறார்கள். பிறகு அம்மாவுக்கு ஆறுதலாக பேசி அப்பாவை நினைத்து கோபி வருந்தி அழுகிறார்.

இதுவரை ஆடிய ஆட்டத்திற்கு கோபிக்கு கிடைத்த தண்டனை

இந்நிலையை செழியன், எழிலுக்கு போன் படி நடந்த விஷயத்தை சொல்லி வர வைக்கிறார். வந்ததும் தாத்தா கடைசியாக பேசிய வார்த்தைகளை அனைத்தையும் நினைத்து பார்த்து ரொம்பவே வேதனை பட்டுக் கொள்கிறார். பிறகு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும் நேரம் வந்து விட்டதால் கோபி அதற்கு தயாராகுகிறார்.

ஆனால் ஈஸ்வரி, இவன் எந்த சடங்கும் செய்யக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோபி அம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார். அம்மா தயவு செய்து எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்து விடாதீர்கள் என்று காலில் விழுந்து கெஞ்சி பார்க்கிறார். ஆனால் ஈஸ்வரி, பாக்யாவிடம் மாமாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றால் நீதான் மகளாக இருந்து எல்லா சடங்கு சம்ப்ராதயமும் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

உடனே பாக்யா, மாமனாருக்கு மகளாக இருந்து அனைத்து விஷயங்களையும் முன்னே நின்று செய்கிறார். இதை ஓரமாக நின்னு கோபியால் வேடிக்கை மட்டும் பார்க்க முடிகிறது. இருந்தாலும் பாக்யா செய்வதை தடுக்க முடியாததால் கோபி அழுது கொண்டே பின்னாடி போகிறார். அதே மாதிரி மூத்த பேரனாக செழியன் இருந்தாலும் ஜெனி கர்ப்பமாக இருக்கும் பொழுது அவரால் இதை செய்ய முடியாது என்பதால் பாக்யாவுடன் சேர்ந்து எழில் அனைத்து விஷயங்களையும் செய்கிறார்.

சோகத்துடன் அனைவரும் ராமமூர்த்தியின் இறுதி சடங்குகளை செய்து விடுகிறார்கள். இதுவரை கோபி என்ன தவறுகள் செய்திருந்தாலும் ஈஸ்வரி அவரை மன்னித்து மகன் என்ற பாசத்தை காட்டி வந்தார். ஆனால் கடைசியாக அம்மாவை நம்பாமல் ராதிகாவுக்கு சப்போட்டாக நின்ன ஒரு காரியத்திற்காக தற்போது ஈஸ்வரி எடுத்த முடிவு கோபியை ரொம்பவே வருத்தம் அடைய செய்து விட்டது.

இருந்தாலும் இதுவரை கோபி கொஞ்சம் கூட யாருக்கும் அடங்காமல் ஆடிய ஆட்டத்திற்கு இந்த தண்டனை மிகப் பெரிய தண்டனையாக கொடுத்தது பாவமாக தெரிகிறது. இன்னொரு பக்கம் என்னதான் சீரியல் நடிப்பாக இருந்தாலும் இந்த அளவிற்கு சடங்கு சம்பிராதங்கள் செய்து அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் இவ்ளோ பெரிய கஷ்டத்தை கொடுத்திருக்க வேண்டாம் என்றும் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News