வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யின் வேகத்தை குறைத்து சமாதானப்படுத்தும் பெருந்தலைகள்.. ஆரம்ப புள்ளியோடு வைக்க போகும் முற்றுப்புள்ளி

Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தை நடித்து முடித்துவிட்டு சினிமாவில் ஒரு பிரேக் எடுக்கும் முடிவில் இருக்கிறார்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டு இருக்கும் விஜய், இதற்காக இரண்டு மூன்று ஆண்டுகள் வரை நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். முழுமூச்சாக அரசியலில் இறங்குவது தான் அவருடைய அடுத்த கட்ட செயல்பாடுகள்.

Also Read: 3 தடவை மிஸ் பண்ணிட்டேன், இந்த தடவை மிஸ் ஆகாது.. தளபதி 70 படத்தில் இயக்குனர் செய்யப் போகும் பிரம்மாண்டம்

ஆனால் இன்னும் அவருக்கான அரசியல் நேரம் வரவில்லை. அவர் அரசியலில் இறங்குவதற்கான வேலைகள் அனைத்தும் செய்தாலும் இப்போதைக்கு எல்லாமே அவருக்கு ரிவர்ஸ் ஆக நடக்கிறது. இன்னும் விஜய் மக்களிடம் முழுமையாக செல்லவில்லை.

ஒரு நடிகனாய் ஜெயித்தாலும் அரசியலில் இறங்கும் அளவு விஜய் பக்குவப்படவில்லை. அதனால் விஜய்க்கு அரசியலில் காட்ஃபாதராக இருக்கும் இரண்டு பெருந்தலைகள் அவரை கன்வின்ஸ் செய்து வருகிறார்கள். ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது.

Also Read: பட்ட அவமானங்களை படமாக்கும் தளபதி 68.. எல்லாத்தையும் ஒரு கை பார்த்திடலாம் துணிந்து நிற்கும் விஜய்

இன்னும் சில வருடங்கள் மக்களைப் பற்றியும் மக்களுடைய மனதில் நீங்கள் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பை அதிகப்படுத்துங்கள். இப்போதைக்கு அரசியல் வேண்டாம் இன்னும் ஐந்து ஆண்டுகள் போகட்டும். பதறிய காரியம் என்றைக்கும்மே சிதறும்.

அதனால் அரசியலுக்கு கால் எடுத்து வைப்பதை நிதானமாகவே செய்யுங்கள். அதன் பின் நினைத்ததை செயல்படுத்தவும் என விஜய்யை அரசியலில் இறங்க மறுப்பு தெரிவித்து சமாதானப்படுத்தி வருகிறார்கள். ஆனால் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தளபதியை அரசியலுக்கு வர சொல்லி தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

Also Read: வித்தியாசமாய் நடிக்க வரும்னு விஜய் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. இளைய தளபதியை வச்சு செய்த இயக்குனர்ஸ்

Trending News