திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சக நடிகையை படு கேவலமாக திட்டிய அசீம்.. ஒரிஜினல் முகத்தைப் பார்த்து அரண்டு போன சூட்டிங் ஸ்பாட்

சீரியலில் நடித்து பிரபலமாக இருந்தாலும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அசீமுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது. எதற்கெடுத்தாலும் கோபப்படுவது சண்டை போடுவது என்று இவர் அனைவரின் வெறுப்பை சம்பாதித்தாலும் இவருக்கான ஆதரவு சோசியல் மீடியாவில் பெருகி கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவராக இருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் படுமோசமாக நடந்து கொண்ட ஒரு சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் நடித்த ஹீரோவுக்கு பதிலாக அசீம் நடிக்க வந்தார்.

Also read: வன்மத்துடன் கட்டம் கட்டிய போட்டியாளர்கள்.. தரமான பதிலால் நோஸ்கட் செய்த அசீம்

அங்கு தான் வினையே ஆரம்பித்திருக்கிறது. அதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த அந்த சீரியல் இவர் வந்ததற்குப் பிறகு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதாவது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகப்பட்ட அலப்பறை கொடுத்திருக்கிறார். தயாரிப்பு தரப்புக்கும் வேறு வழியில்லாததால் அவருடைய இந்த அட்ராசிட்டியை பொறுத்து போய் இருக்கிறது.

ஆனால் சக நடிகர்களால் அப்படி இருக்க முடியவில்லை. ஏனென்றால் அசீம் சீரியலில் நடிப்புக்காக கூட என்னை யாரும் மரியாதை குறைவாக பேசக்கூடாது என்று சொல்வாராம். அது மட்டுமல்லாமல் வசனங்களில் திருத்தம் செய்வது என்று ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்திருக்கிறார். ஒருமுறை இவர் அந்த சீரியல் ஹீரோயினிடம் சூட்டிங் ஸ்பாட்டில் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

Also read: பெண்கள் முன் ஹீரோயிசம் காட்டும் அசீம்.. குறும்படம் போட்டு கரியை பூச போகும் ஆண்டவர்

ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் அசீம் அந்த நடிகையை அனைவரின் முன்பும் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க பாய்ந்து இருக்கிறார். இதனால் அந்த இடமே கலவரமாக மாறி இருக்கிறது. மேலும் அசீம் மேல் தப்பு இருந்தாலும் தயாரிப்பு நிர்வாகம் அந்த ஹீரோயினையும், சக நடிகர்களையும் சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்திருக்கிறது.

ஆனால் இந்த விஷயத்தை அப்படியே விடாத அந்த நடிகை அசீம் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் ஷூட்டிங் நடக்கும் என்று தர்ணா செய்திருக்கிறார். அவருக்கு துணையாக மற்ற நடிகைகளும் இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு வழியாக அசீம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை அந்த சீரியலில் வில்லியாக நடித்த நடிகை தேவி பிரியா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Also read: பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

Trending News