வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெண்கள் முன் ஹீரோயிசம் காட்டும் அசீம்.. குறும்படம் போட்டு கரியை பூச போகும் ஆண்டவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பார்ப்பவர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. எந்த நேரமும் சந்தை கடை போன்று கூச்சலும், சண்டையுமாகவே இருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்போது கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் பயங்கர விறுவிறுப்பை கூட்டுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரணகளமாக ஆட்டத்தை ஆடிவரும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை பயங்கர உற்சாகத்துடன் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அதில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள்ளே விளையாட்டு மும்மரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு செரினா கீழே விழுந்தார்.

Also read : அசல் சும்மா இருந்தாலும் இவ விட மாட்டா போல.. பிக்பாஸ் வீட்டில் மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் பதறி போனார்கள். மேலும் பெண்கள் முன் எப்போதும் ஹீரோயிசத்தை காட்டிக் கொண்டிருக்கும் அசீம் உடனே ஓடிப்போய் அவரை தூக்கி கொண்டு மருத்துவ அறைக்கு சென்றார். பிறகு என்ன நடந்தது என்றே தெரியாமல் தனலட்சுமியிடம் வந்து நீ எல்லாம் ஒரு பெண்ணா? இப்படி தள்ளிவிடுற, ஏதாவது நடந்திருந்தா என்ன செய்வது என்று ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தார்.

நான் தள்ளி விடல என்று தனலட்சுமி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அசீம் ஓவராக கத்திக் கொண்டிருந்தார். இதனால் வேறு வழி இல்லாமல் தனலட்சுமி கேமராவில் எல்லாம் ரெக்கார்ட் ஆகி இருக்கும். அதில் என் மீது தவறு இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று அமைதியாக சொன்னார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் உண்மையில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

Also read : பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய 7 பேரின் ஓட்டிங் லிஸ்ட்.. யாரும் எதிர்பாராத முதலிடம், வெளிவரப்போகும் கோளாறு

அதாவது பொம்மையை ஒருவருக்கொருவர் பிடுங்க முற்படும் போது தான் செரீனா கீழே விழுந்தார். அந்த வகையில் அந்த சம்பவத்தில் அனைவருக்குமே பங்கு இருக்கிறது. ஆனால் செரினாவுக்கு அருகில் தனலட்சுமி இருந்ததால் அவர் மீது மொத்த பழியையும் போட்டு விட்டனர். இதைப் பற்றி கூறும் ரசிகர்கள் குறும்படம் வேண்டும் என்று ஆண்டவரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சென்ற வாரம் வில்லன் போல் நடந்து கொண்ட அசீம் இந்த வாரம் தன்னுடைய பெயரை காப்பாற்றுவதற்காகவே இப்படி ஹீரோயிசம் காட்டி வருகிறார். அதனால் தான் அவர் தனலட்சுமியை வில்லி போன்று சித்தரித்து பேசி இருக்கிறார். ஆனாலும் இந்த விஷயத்தில் தனலட்சுமி அமைதியாக இருப்பது அவருக்கான ஆதரவை அதிகப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் இந்த பிரச்சனையை கமல் எப்படி தீர்த்து வைப்பார் என்பதை காணவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் செரினா இந்த விஷயத்தில் ரொம்பவும் அதிகப்படியாக நடந்து சீன் போட்டதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also read : பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் 2வது போட்டியாளர்.. பெண்களிடம் அத்துமீறிய மன்மத குஞ்சு

Trending News