வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆயிஷாவை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற அசீம்.. பிக் பாஸ் வீட்டில் நடந்த விபரீதம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜி பி முத்து மற்றும் சாந்தி வெளியேறிய நிலையில் மற்ற போட்டியாளர்கள் ஆட்டத்தை விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். இதில் சின்னத்திரையைச் சேர்ந்த ஆயிஷா மற்றும் அசீம் இடையே ஏற்கனவே தகராறு நடந்தது.

அதாவது நம்பர் டாஸ்க் ஆயிஷாவை மரியாதை குறைவாக வாடி, போடி என்று அசீம் பேசினார். இதனால் பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறியது. மேலும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கமல்ஹாசன் முன்னிலையில் அசீமுக்கு ரெட் கார்ட் கொடுத்தனர். இந்நிலையில் அசீமும் தனது தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

Also Read :பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

ஆனால் நேற்று நடந்த நாமினேஷன் டாஸ்கில் அசீம் ஆயிஷாவை நாமினேட் செய்தார். இந்நிலையில் ஆயிஷாவுக்கு உடல்ரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கிறது. இதனால் நேற்று பிக் பாஸ் வீட்டில் இரண்டு, மூன்று தடவை ஆயிஷா மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

உடனே மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்காக ஆயிஷாவை குண்டுகட்டாக தூக்கி சென்றார் அசீம். மேலும் வாடி, போடி என்ற தரைக்குறைவாக பேசிய அசீம், ஆயிஷா மயக்கமான பின்பு காலை சூடேற்றுவதற்காக தடவி கொடுக்கிறார்.

Also Read :விவாகரத்து பின் மகளுக்காக ஏங்கும் ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் வீட்டில் கதறி அழுததின் பின்னணி இதுதான்

இவர் எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர் என்று யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு அசீம் நடந்து கொண்டு வருகிறார். மேலும் ஆயிஷா உடல் நிலையில் பிரச்சனை இருப்பதால் தொடர்ந்து அவரால் பிக் பாஸ் வீட்டில் பயணிக்க முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது ஆயிஷாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இவர் பிக் பாஸ் வீட்டிலேயே தொடரலாமா என்பது பற்றி விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளனர். இவ்வாறு பிக் பாஸ் சீசன் 6 ஒவ்வொரு நாளும் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு பல விஷயங்கள் இதில் அரங்கேறி வருகிறது.

Also Read :ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

Trending News