ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

போர் தொழிலுக்குப் பிறகு கொட்டும் அதிர்ஷ்டம்.. வாரிசு நடிகையை கரம் பிடிக்கும் அசோக் செல்வன்

Ashok Selvan: தொடர்ந்து சினிமா பிரபலங்களின் திருமண செய்தி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அடுத்தபடியாக பிக் பாஸ் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலி ஆன மோனிகாவை இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இப்போது அசோக்செல்வனின் திருமண செய்தி வெளியாகி அதிர்ச்சி உடன் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெகிடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் தான் அசோக் செல்வன். அதன் பிறகு சில படங்களில் அவர் நடித்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் வெற்றி பெறவில்லை.

Also Read : திருமண நாளை லாக் செய்த டாடா கவின்.. பொண்டாட்டியாக போறவங்க இவங்கதான்

அதன் பிறகு ரித்திகா சிங் உடன் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் கடைசியாக அவரது நடிப்பில் போர் தொழில் படம் வெளியாகி இருந்தது. சரத்குமார் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அசோக் செல்வனும் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதன் மூலம் அசோக் செல்வன் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார் என பலரும் கூறி வந்தனர். இப்போது 33 வயதாகும் அசோக் செல்வன் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறதாம்.

Also Read : பாத்ரூம் கிளீனா இல்லை, படப்பிடிப்பை நிறுத்திய குத்துச்சண்டை நடிகை.. இயக்குனரே கழுவியதாக உண்மையை உடைத்த அசோக் செல்வன்

அருண் பாண்டியனுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில் மூன்றாவது மகளான கீர்த்தி பாண்டியனுக்கு விரைவில் திருமணம் அசோக்செல்வனுடன் நடக்க இருக்கிறது. கீர்த்தி பாண்டியனும் கதாநாயகியாக சில படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் மலையாளத்தில் வெளியான ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆன அன்பிற்கினியாள் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். அசோக் செல்வன் மற்றும் அருண் பாண்டியன் குடும்பத்தினர் விரைவில் இவர்களது திருமண செய்தியை அறிவிக்க இருக்கிறார்கள்.

Also Read : விறுவிறுப்பான கதையை தேர்ந்தெடுக்கும் அசோக் செல்வனின் 5 படங்கள்.. போர்த் தொழிலுக்கு முன் வெளிவந்த திகில் படம்

Trending News