வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் அசோக், கீர்த்தி.. கிரிக்கெட்டை வைத்து ஜாதி அரசியல் பேசும் ப்ளூ ஸ்டார் டிரைலர்

Blue Star Trailer Out : எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

கிரிக்கெட்டை வைத்து ஜாதி அரசியல் பேசும் படமாக ப்ளூ ஸ்டார் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் சாந்தனு அணியும், மற்றொருபுறம் அசோக் செல்வன் அணியும் போட்டியிடுகிறது. அசோக் செல்வன் ஜாதியால் தாழ்த்தப்பட்டுள்ளதால் பல அவமானங்களை சந்திக்கிறார். அப்போது அவருக்கு உறுதுணையாக அவரது தந்தை அவரது காதலி கீர்த்தி பாண்டியனும் இருக்கிறார்.

அதுவும் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டி இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையை கிளம்பி இருக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தான் இருவரும் காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தனர். மேலும் ப்ளூ ஸ்டார் படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.

Also Read : எந்த சப்போர்ட்டும் இல்லாமல் 2023 ஜெயித்த 3 ஹீரோஸ்! பெரிய கையை வளைத்து போட்ட அசோக் செல்வன்

அசோக்செல்வன் துவண்டு போய் இருக்கும்போது அவருக்கு பக்க பலம் கொடுக்கும் விதமாக ஆறுதல் வார்த்தைகளை கீர்த்தி பாண்டியன் பேசுகிறார். இப்படி ஒரு காதல் ஜோடியா என பொறாமைப்படும் அளவிற்கு தான் படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். அதனால் தான் என்னவோ இருவரும் உண்மையாகவே காதலில் திளைத்துள்ளனர். மேலும் ப்ளூ ஸ்டார் படம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Trending News