வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அசோக் செல்வன், கீர்த்திக்கு காதல் உருவாக காரணமான ரொமான்டிக் படம்.. திருமணத்திற்காக வெளியிட்ட வீடியோ

Ashok Selvan- Keerthi Pandiyan: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை விட ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் இன்று நட்சத்திர தம்பதியர்கள் ஆக நடிகர் அசோக் செல்வன்- கீர்த்தி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஸ்பெஷல் டேவில் இவர்கள் இருவரின் ரொமான்டிக் லிரிக்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இன்று திருமணமான அசோக் செல்வன்- கீர்த்தி இருவரின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அது மட்டுமல்ல இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியை எப்படி வளைத்து போட்டார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.

Also read: அருண் பாண்டியனின் 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான அசோக் செல்வன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

இதற்கு முழு காரணமும் இயக்குனர் பா.ரஞ்சித் தான். ஏனென்றால் அவர் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கிய திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அசோக் செல்வன் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு அசோக் செல்வனின் அழகு மட்டும் இன்றி குணமும் பிடித்துப் போனதால் இவர்களது காதல் இப்போது திருமணத்தில் முடிந்து இருக்கிறது. மேலும் இவர்களது திருமண நாளான இன்று ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் என்ற ரொமான்டிக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also read: இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

இந்த பாடல் முழுக்க முழுக்க காதல் பாட்டு என்பதால் அதில் இருக்கும் வரிகள் அனைத்தும் ரொம்பவே ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட லவ் ஸ்டோரியில் நடித்தால் காதல் பத்திக்க தானே செய்யும் என்று ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை குறித்து விமர்சிக்கின்றனர்.

ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் பாடலின் லிரிக் வீடியோ இதோ!

Trending News