வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாத்ரூம் கிளீனா இல்லை, படப்பிடிப்பை நிறுத்திய குத்துச்சண்டை நடிகை.. இயக்குனரே கழுவியதாக உண்மையை உடைத்த அசோக் செல்வன்

Actor Ashok Selvan: ஆரம்பத்தில் இருந்து தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அசோக் செல்வன், சமீபத்தில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அதிரடி த்ரில்லர் திரைப்படமாக வெளியான போர் தொழில் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அசோக்செல்வன் அளித்த பேட்டி ஒன்றில், படப்பிடிப்பு நின்று விடக்கூடாது என நடிகையின் பாத்ரூமை கழுவிய இயக்குனரை பற்றி கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

2020 ஆம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் ‘ஓ மை கடவுளே’. இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 96 படத்திற்கு பிறகு நம்மை வியக்க வைத்த காதல் திரைப்படம். இதில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் காதல் கதைக்குள் கடவுள் வந்தால் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான கற்பனையுடன் காதலின் சிறப்பை அழுத்தமாக உணர்த்தியிருக்கும்.

Also Read: விறுவிறுப்பான கதையை தேர்ந்தெடுக்கும் அசோக் செல்வனின் 5 படங்கள்.. போர்த் தொழிலுக்கு முன் வெளிவந்த திகில் படம்

இந்த படத்தில் கடவுளாக விஜய் சேதுபதி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து எப்படி இந்த கதையை யோசித்தார் என படத்தை பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். இதன் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை படக்குழு சமீபத்திய பேட்டி ஒன்றில் உண்மையை உடைத்திருக்கிறார்கள். அதிலும் இயக்குனர் செய்த செயல் பலரையும் புல்லரிக்க வைத்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கதாநாயகி ரித்திகா பாத்ரூம் போக வேண்டும் என படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு லாட்ஜிற்கு சென்றாராம். அது சிறிய பட்ஜெட் என்பதால் சாதாரண லாட்ஜில் தான் ரூம் போட்டிருக்கிறார்கள். அதில் ஒரே ஒரு பாத்ரூம் மட்டுமே இருந்திருக்கிறது. ரித்திகா அந்த பாத்ரூமில் எட்டி பார்த்துவிட்டு சுத்தமாக இல்லை என ஒரே கலாட்டா செய்திருக்கிறார். படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடனடியாக அந்த பாத்ரூமை சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார்.

Also Read: 20 நாட்களில் பல கோடி வசூலித்த போர் தொழில்.. தியேட்டர் ஓனர்களை கதி கலங்க வைத்த ஓடிடி

ஒரு இயக்குனர் கதாநாயகிக்காக பாத்ரூம் கழுவியது உண்மையாகவே சிலிர்பூட்டுகிறது. இந்த விஷயத்தை படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் தான் படக்குழு இருக்கும்போதே அஸ்வத் மாரிமுத்துவை பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அந்த இடத்தில் அஸ்வத் மாரிமுத்து சொன்ன விஷயம் தான் கூடுதல் சிறப்பு.

‘ரித்திகா தன்னுடைய தோழி. அவருக்கு பாத்ரூம் அர்ஜெண்டாக இருக்கும்போது, அந்த இடத்தில் உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தானே கழிப்பறையை சுத்தம் செய்து அவருடைய பிரச்சனையை தீர்த்து வைத்தேன். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை, அதை பெருமையுடன் செய்தேன். அதுமட்டுமல்ல என்னுடைய படப்பிடிப்பிற்கு எந்த காரணத்தாலும் தடங்கள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்’ என்று அஸ்வத் மாரிமுத்து ரொம்பவே எதார்த்தமாக பேசினார்.

Also Read: 2 வாரங்கள் ஆகியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் போர் தொழில்.. அள்ள அள்ள குறையாத வசூல் ரிப்போர்ட்

இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. பலரும் அஸ்வத் மாரிமுத்து மென்மேலும் வளர வாழ்த்துகின்றனர். அது மட்டுமல்ல படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் ‘ஓ மை கடவுளே’ படத்தில் வெற்றிக்கு இதெல்லாம் தான் காரணம் என்று இந்த விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Trending News