வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக திட்டிய அசோக் செல்வன்.. வருஷத்துக்கு 5 பிளாப் செம ரெக்கார்டு

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வம்பு இழுக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் அஜித் முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரையும் தனது சமூக வலைத்தளம் மூலம் வறுத்து எடுத்து வருகிறார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து இதுபோன்ற செய்து வருகிறார்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் உள்ளதால் இந்த ஆண்டு ஹிட் படங்கள், தோல்வி படங்கள் என பல செய்திகள் வெளியாகி வருகிறது. இதில் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதை குறிப்பிட்டு வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Also Read : 2022-ல் அசோக் செல்வன் கொடுத்த 5 தோல்வி படங்கள்.. மொத்தமாக ஊத்தி முடிய வெங்கட் பிரபுவின் மன்மத லீலை

அதாவது இந்த ஆண்டு அதிக தோல்வி படங்கள் கொடுத்ததாக அசோக் செல்வனின் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் ஆகிய 5 படங்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் சசிகுமார் மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான மூன்று படங்களும் தோல்வியாகி உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த அசோக் செல்வன் காண்டாகி தனது ட்விட்டர் பக்கத்தில், குறைக்கும் நாய்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாம் எப்போதுமே முன்னோக்கி செல்ல வேண்டும் என்று மறைமுகமாக ப்ளூ சட்டை மாறனை தாக்கி பதிவிட்டுள்ளார். இதை அறிந்த ப்ளூ சட்டை மாறன் சும்மா இருப்பாரா.

Also Read : 3 வருடம் என் பக்கத்தில் வராதீங்க.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அசோக் செல்வன்

இதற்கு எதிராக அவரும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதாவது ட்வீட் மூலம் குறைப்பது நல்லது கிடையாது, தயாரிப்பாளர் பணத்தை வீணாக்கிவிட்டு வருஷத்திற்கு 5 பிளாப் படம் கொடுப்பது மிகப்பெரிய ரெக்கார்டு. வருங்காலத்தில் உங்களின் சாதனையை முறியடிக்க ஒரு ஹீரோ வருவார்.

blue-sattai-maran

இந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்ஜாய் தி பிஸ்கட் என நக்கலாக கமெண்ட் செய்து உள்ளார். சசிகுமார் மற்றும் அதர்வா இருவரும் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று எதுவும் பேசாமல் இருந்தபோது தேவையில்லாமல் அசோக் செல்வன் பதிவிட்டு வம்பை விலக்கி வாங்கியுள்ளார்.

blue-sattai-maran

Also Read : மீண்டும் மீண்டும் முட்டாளாக்கும் ரஜினி.. மாஸ்டர் பிளான் போட்டதை அம்பலப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்

Trending News