ஒரு காலத்தில் அஸ்வின் என்றால் பலருக்கும் தெரியாது. ஆனால் ஆதித்யா வர்மா படத்தில் துருவ் விக்ரமிற்கு அண்ணனாக நடித்ததன் மூலம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகராக அறிமுகமானார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இப்போது தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பில் 3 படங்கள் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்த படங்களுக்காக இவருக்கு 30 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கியுள்ளனர். இதைத்தவிர கிருத்திகா உதயநிதி இவரை வைத்து ஒரு படம் இயக்கயிருந்தார்.

இந்த படத்தின் கதையும் அஸ்வினுக்கு பிடித்துப்போனது. ஆனால் படக்குழு இதனை ஒரு வெப் சீரியஸாக எடுப்பதாக கூறியுள்ளனர். அதனால் அஸ்வின் நான் பல வருடங்கள் கஷ்டப்பட்டு இப்போதுதான் படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளேன். மீண்டும் வெப் சீரியல் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் கதை தனக்கு பிடித்து போனதாகவும். ஆனால் வெப்சீரிஸ் என்ற ஒரே ஒரு காரணத்தினால் தான் அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை எனவும் வெளிப்படையாக அஸ்வின் குமார் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சிறு தயாரிப்பாளர்கள் நம்பியிருந்த அஸ்வின் தற்போது அவர்களை உதறித் தள்ளி வருகிறார். இதனைக்கேட்ட சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் இன்னும் ஒரு படம் கூட வெளிவரவில்லை அதற்குள்ளே இவ்வளவு பந்தாவா எல்லாம் காலம் உணர்த்தும் என கூறியுள்ளனர்.