திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பறிபோகும் படவாய்ப்புகள்.. காணாமல் போய் விடுவோமோ என்ற பயத்தில் அஸ்வின்

தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் என்றெல்லாம் பலரால் பேசப்பட்ட குக் வித் கோமாளி அஸ்வின் தற்போது சினிமாவில் இருப்பாரா என்பதே சந்தேகம் தான் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை. ஒரே ஒரு மேடை தான், டோட்டல் இமேஜும் கிளோஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் இடையே பேராதரவை பெற்று தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அஸ்வின். இவர் ஏகப்பட்ட மியூசிக் வீடியோ பண்ணியிருந்தாலும் ஹீரோவாக அவர் தமிழ் சினிமாவில் சாதிக்க நினைத்தார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற அவருக்கு கேட்காமலேயே பல பட வாய்ப்புகள் குவிந்தன. இவ்வளவு ஏன் ஒரே ஒரு தயாரிப்பு நிறுவனமே அவர் வைத்து மூன்று படங்கள் எடுக்க ரெடியானது. அட்வான்ஸ் கூட கொடுத்து ஓகே செய்து விட்டார்களாம்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டுமோ அப்படிப் பேசினால் மட்டுமே அவர்கள் பிழைக்க முடியும் என்பது அஸ்வின் வாயிலாக நிரூபணம் ஆகி விட்டது. அதுவரை அஸ்வினை அழகன் பேரழகன் அனைவரையும் மதிக்கத் தெரிந்தவன், ஆகா ஓஹோ என்று புகழ்ந்து அவர்களே இப்போது அவரை கேலி கிண்டல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அஸ்வின் ஹீரோவாக நடித்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சும் அவரது நடவடிக்கைகளும் யாருக்குமே பிடிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களை அவரை திட்டியபடி கிண்டல் செய்த படியும் பதிவுகள் அரங்கேற தடுமாறி போன பின் உடனடியாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ஆனால் அதெல்லாம் வெறும் நடிப்புதான் என்று சொல்கிறது கோலிவுட் வட்டாரம். சமீபத்தில் கூட ஒரு இயக்குனரிடம் கதை கேட்க ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட சொல்லி தயாரிப்பாளரை செய்ததாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஸ்வினின் முதல் படம் வெளியீடு தள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அஸ்வினை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட ஒரு தயாரிப்பு நிறுவனம் அஸ்வினின் இந்த நடவடிக்கைகளை பார்த்துவிட்டு இருந்த பட வாய்ப்பையும் பிடுங்கி கொண்டதாம். நாளுக்கு நாள் அவரை நம்பி அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் அனைவருமே பின் வாங்குவதால் வருங்காலத்தில் சினிமாவில் நாம் தாக்குப்பிடிக்க முடியுமா? என்ற சந்தேகத்தில் கவலையில் இருக்கிறாராம் அஸ்வின்.

Trending News