விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஹரிஹரன் இயக்கி இருந்த இந்த படத்தில் தேஜஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ் போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது அஸ்வின் ரொம்பவும் திமிராக பேசியதால் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் அவர் நடித்த படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.
பின்னர் பல தடைகளை தாண்டி இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்த்த பலரும் அஸ்வினை இன்னும் அதிகமாக கிண்டல் செய்தனர். என்னதான் அவருக்கு பல ரசிகர்கள் இருந்தாலும் இந்த படத்தை பார்த்த பலரும் பிடிக்கவில்லை என்று தான் கூறினர்.
இதனால் இந்தப் படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு ஒரு ரசிகர்கள் மீட்டை நடத்தினார்கள். இதில் அஸ்வின் மற்றும் அந்த படத்தின் ஹீரோயின் பங்கேற்றனர்.

அதில் அஸ்வின் தன்னுடைய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மாறுவேடத்தில் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். தலையில் விக், தாடி, தொப்பி என்று வித்தியாசமாக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அஸ்வின் இப்படி மாறுவேடத்தில் வந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் முன்பை விட அதிகமாக அஸ்வினை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.