வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கல்யாணத்தை வைத்து கல்லா கட்ட நினைத்த தூங்கும் ஸ்டார்.. புளியங்கொம்பை பார்த்து புடிச்ச அஸ்வின்

Actor Ashwin: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு எத்தனையோ நடிகர்கள் வந்து பெரிய அளவில் சாதனை புரிந்து வருகிறார்கள். அந்த வகையில் தானும் இடம்பெற வேண்டும் என்று நிறைய ஆசைகளுடன் நடிப்பதற்கு வந்தவர் தான் அஸ்வின். ஆனால் நடிக்க வந்ததிலிருந்து தலைகால் புரியாமல் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல், தவளை தன் வாயால் கெட்டது போல் இவர் பேசிய வார்த்தைகளால் இவருடைய சினிமா கேரியரில் பல சர்ச்சைகளை சந்தித்தார்.

அதற்கேற்ற மாதிரி இவர் நடித்த ஒரு சில படங்கள் வெற்றி பெறாமல் மிகவும் தவித்து வருகிறார். தற்போது இவருடைய நிலைமை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இவருக்கு குக் வித் கோமாளி மூலம் கிடைத்த ரசிகர்களை வைத்து சிவகார்த்திகேயன் போல் பெரிய நடிகராக வந்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

Also read: அஸ்வின் போல ஆணவத்தில் ஆடும் யூடியூபர்.. முதல் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கும் மஞ்சள் வீரன்

ஆனால் அப்படி ஏதும் அமையாமல் அதற்கு எதிர் மாறாக தூங்கு மூஞ்சி அஸ்வின் என்ற பட்டத்தை வாங்கிக் கொண்டு பலபேர் கலாய்க்கும் படி இவருடைய நிலைமை ஆகிவிட்டது. அதனால் இவரை தேடி எந்த பெரிய பட வாய்ப்புகளும் வரவில்லை. வந்த வாய்ப்புகள் அனைத்தும் சிறிய படங்கள் தான். ஆனாலும் அதைவிடாமல் நடித்துக் கொண்டு தான் வருகிறார்.

இப்படியே போய்க்கொண்டிருந்த இவருடைய சினிமா கேரியரில் திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பெரிய ஸ்டார் ஆகுவதற்கு முன்னாடி திருமணத்திற்கு ஆசைப்பட்டு விட்டார். அதாவது சினிமாவில் தான் சாதிக்க முடியவில்லை கல்யாண வாழ்க்கையாவது பெஸ்டாக இருக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்யப் போகிறார்.

Also read: மிரட்டும் பீட்சா 3.. விஜய் சேதுபதியை ஓரம் கட்டுவாரா அஸ்வின்?

ஒருவேளை இது காதல் கல்யாணமா? அல்லது பட வாய்ப்புகள் வரலை அதனால் பணத்துக்கும் திண்டாடி வருவதால் கல்யாணத்தின் மூலம் கல்லாகட்ட நினைத்து விட்டாரோ என்னமோ. அதற்காக நல்ல புளியங்கொம்பாக பார்த்து பிடித்து விட்டார். இனிமேல் என்ன தயாரிப்பாளரே மாமனாராக போகிறார்.

அதனால் பட வாய்ப்புக்கும், பணத்துக்கும் பஞ்சமே இருக்காது. மாமனாரை வைத்து சாதிக்க வேண்டியது எல்லாம் சாதிக்கப் போகிறார், என்று இதை வைத்து இன்னும் அதிகமாகவே நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். எது எப்படியோ கல்யாணம் பண்ண போற வீட்லயாவது வாயை வச்சுட்டு சும்மா இருந்தா அதிலாவது கௌரவம் மிஞ்சும்.

Also read: கொல நடுங்க வைத்த அஸ்வின்ஸ்.. 15 நாட்களில் அள்ளிய மொத்த வசூல் ரிப்போர்ட்

Trending News