திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அஸ்வினின் முதல் படத்துக்கே ஆப்பு.. தவளை தன் வாயால் கெடும்

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அதிகம் டிரெண்டிங்கில் இருப்பவர் அஸ்வின் குமார். சின்ன சின்ன மியூசிக் ஆல்பம் பாடல்களில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் முதன்முறையாக என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் அஷ்வின் கொஞ்சம் தலைக்கணத்துடன் பேசியதாக தெரிந்தது. அதுவும் 40 இயக்குனர்கள் தன்னிடம் கதை சொன்னதாகவும் அந்த கதைகளை கேட்டு தூங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைப் பார்த்துக் கடுப்பான நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் அஸ்வினை தாக்கி மீம்ஸ் போட்டு அவரது முதல் படத்துக்கு ஆப்பு வைத்து விட்டனர். தடபுடலாக நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவுடன் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நின்று விட்டது.

தற்போது அஸ்வினுக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் இருப்பதால் அந்த படத்தை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என அந்த படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டாராம். தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழி அஸ்வினுக்கு பொருத்தமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

முதல் படத்திலேயே இப்படி நடைபெற்றதால் வருத்தத்தில் இருக்கிறாராம் அஸ்வின். சமீபத்தில் கூட தன்னை அறியாமல் பயத்தில் அப்படி உளறி விட்டேன் என வீடியோவை வெளியிட்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அஸ்வினுக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் ஒருசில நெகட்டிவ் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

Trending News