புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அட களத்தில் என்னதான்யா பிரச்சனை? உண்மையை போட்டு உடைத்த அஸ்வின்

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களும் இங்கிலாந்து வீரர்களும் களத்தில் ஆக்ரோஷமாக மோதி கொண்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் தருவாயில் உள்ள போது மழை குறுக்கிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் பரபரப்பாக நடந்து முடிந்தது.

இங்கிலாந்து அணி வீரர்கள் எப்பொழுதுமே தமது நாட்டிற்கு வந்து விளையாடும் வீரர்களை வம்பிழுத்து பார்ப்பார்கள். இம்முறை இந்திய அணி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறி கொண்டிருக்கையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் ஆட்டத்தின் போக்கை இந்திய அணி பக்கம் திருப்பினர்.

Sami-Bumrah-Cinemapettai-1
Sami-Bumrah-Cinemapettai-1

இந்த போட்டியின் பரபரப்புக்கு காரணமாக அமைந்தது, பும்ரா மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையே நடந்த சண்டைதான். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சின் கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கினார் ஆண்டர்சன். அவருக்கு வரிசையாக பவுன்சர்கள் வீசி அவுட் ஆக்கினார் பும்ரா. அவுட் ஆகி செல்லும் போது ஆண்டர்சன், பும்ராவிடம் ஏதோ கூறினார். பும்ரா பேட்டிங் ஆட வரும்போதும் இங்கிலாந்து வீரர்கள் ஏதோ கூற ஆட்டம் சூடு பிடித்தது.

Bumrah-Cinemapettai.jpg
Bumrah-Cinemapettai.jpg

தற்போது இதைப் பற்றி தனது குட்டி ஸ்டோரி என்னும் யூடியூப் தொடரில் அஷ்வின் பேசும் போது களத்தில் என்ன நடந்தது என்பதை விவரித்தார். பும்ரா ஆண்டர்சனுக்கு பந்து வீச வரும் போது, “மற்ற வீரர்களுக்கு எல்லாம் 85 மைல் வீசும் போது எனக்கு மட்டும் 90 மைல் வேகத்தில் வீசுவது சரி இல்லை. இது ஏமாற்று வேலை” என்று சொன்னாராம் ஆண்டர்சன்.

இந்த சண்டையினால் போட்டி மிகவும் விருவிருப்பாக காணப்பட்டு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

Trending News