சமீபகாலமாக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்த சீரியலில் அஸ்வின், சிவாங்கி, பாபா பாஸ்கர் மற்றும் பாலா போன்றோர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்த கூட்டணிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது மட்டுமில்லாமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாச பொலிவினை நடத்திவருகின்றனர்.
ஒரு காலத்தில் அஸ்வின் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் குக் வித் கோமாளி மூலம் இப்பொழுது இவரை தெரியாத ஆட்களே கிடையாது. அந்த அளவிற்கு தனது சமையல் மற்றும் குணத்தின் மூலம் ரசிகைகள் மனதில் குடியேறினார்.
தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஸ்வினை இனிமேல் பார்க்க முடியாது என சிவாங்கி எந்த அளவிற்கு வருத்தப்படுகிறாறோ அதைவிட இரண்டு மடங்கு ரசிகைகள் இனிமேல் அஸ்வின் சின்னத்திரையில் பார்க்க முடியாது என கவலைப்பட்டு வருகின்றனர்.

தற்போது அஸ்வின் மற்றும் சிவாங்கி இவர்கள் இருவருக்கும் விஜய் டிவியிலிருந்து சிறந்த ட்ரெண்டிங் பேர் என விருது வழங்கப்பட்டுள்ளது. சும்மா சும்மா அஸ்வின் எனக்கூறும் சிவாங்கி விருது வாங்கினால் சும்மா இருப்பாரா
அதாவது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் என்னுடன் பணியாற்றிய அஸ்வினுக்கு நன்றி எனவும். இதுவரை அஸ்வினுடன் 9 முறை சேர்ந்து ரியாலிட்டி ஷோவில் பணியாற்றி உள்ளதாகவும் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.