வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நல்லா இருந்த குடும்பத்தில் கும்மி அடித்த மீடியா.. விவாகரத்து செய்தியால் கடுப்பான அசின்

Actress Asin: நடிகைகள் திருமணம் செய்து கொள்வதும் பிறகு விவாகரத்து செய்வதும் புதிது கிடையாது. இந்த லிஸ்டில் எத்தனையோ நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வளவு ஏன் முன்னணி அந்தஸ்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட சமந்தா கூட இப்போது கணவரை பிரிந்து வாழ்கிறார்.

இப்படி நடிகைகள் திருமண வாழ்வை முறித்துக் கொண்டு வரும் நிலையில் அசினும் விவாகரத்து செய்யப் போகிறார் என்று வெளிவந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முதலே இந்த விஷயம் தான் மீடியாவையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் கெத்து காட்டி வந்த அசின் பாலிவுட் பக்கம் சென்றார்.

Also read: மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 5 பிரபலங்களின் விவாகரத்து.. சமந்தாவை விட ஷாக் கொடுத்த பிசின் நடிகை

ஆனால் அங்கு அவரால் ஜெயிக்க முடியாத நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கஜினி படத்தில் வருவது போன்று மொபைல் கம்பெனி உரிமையாளரை இவர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து சினிமாவுக்கு குட்பை சொன்ன அசின் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தன் சோசியல் மீடியா பக்கத்தில் கணவருடன் இருந்த போட்டோக்கள் அனைத்தையும் அவர் நீக்கி இருந்தார். இதுதான் இந்த விவாகரத்து செய்திக்கு தீனியாக அமைந்தது.

Also read: புளிச்சு போன 7 வருட திருமண வாழ்க்கை.. தளபதியின் ஆஸ்தான நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா.?

இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது அசின் இந்த செய்தியால் கடுப்பாகி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதாவது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இந்த விவாகரத்து செய்தி வெறும் வதந்தி தான் என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் இப்போது ஹாலிடேவை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறோம். காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் போது இப்படி ஒரு செய்தி டென்ஷன் ஆக்குகிறது. உங்களுக்கு வேற வேலையே கிடையாதா, இதனால் எனக்கு ஐந்து நிமிடம் வேஸ்ட் ஆகிவிட்டது. வேறு ஏதாவது பெட்டராக ட்ரை பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் இந்த பரபரப்புக்கு முடிவு கட்டி இருக்கிறார்.

asin-post
asin-post

Trending News