வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நயன்தாரா அளவுக்கு ஜோதிகாவை நடிக்க சொல்லுங்க.. இயக்குனரிடம் சவால் விட்ட ஸ்டார் நடிகர்

Actress Nayanthara and Jothika: 2000 ஆம் ஆண்டு முன்னணி நடிகையாக ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் ஜோதிகா. முக்கியமாக இவருடைய நடிப்பும் அழகும் ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைக்கு தாயாகிய பின்பும் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட இவருடைய நடிப்பை பார்த்து ஸ்டார் நடிகர் ஒருவர் இயக்குனரிடம் நயன்தாரா அளவுக்கு ஜோதிகாவை நடிக்க வையுங்கள் என்று சவால் விட்டு இருக்கிறார். அதாவது நயன்தாரா நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவிற்கு தான் இருக்கும். ஆனால் அதற்காக இவருடைய சீனியர் நடிகை அதுவும் கனவு கன்னியாக மக்கள் மனதில் குடி புகுந்த ஜோதிகாவை இப்படி சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

Also read: சிம்ரனால் கடுப்பான ஜோதிகா.. முட்ட கண்ணை உருட்டி சந்திரமுகியாக மாறி வெங்கட் பிரபுவுக்கு கொடுத்த நோஸ் கட்

அந்த அளவுக்கு நயன்தாரா நடிப்பை வியந்து பார்த்து பாராட்டிருக்கிறார் ஸ்டார் நடிகர். அவர் வேறு யாருமில்லை தன்னுடைய பட்டத்தை நயன்தாராவுக்கு கொடுத்த சூப்பர் ஸ்டார் தான். அதாவது சந்திரமுகி படப்பிடிப்பின் போது ரஜினி, இயக்குனர் பி வாசுவிடம் இந்த விஷயங்களை பற்றி கூறியிருக்கிறார்.

சந்திரமுகி படம் நயன்தாராவிற்கு இரண்டாவது படமாக இருந்தாலும் இயக்குனர் இவரை மலையாள படத்தில் பார்த்ததின் மூலம் தான் இதில் நடிப்பதற்கு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அதன் பின் சந்திரமுகி ஏற்ற கதாபாத்திரத்தில் ஜோதிகாவை தேர்வு செய்து இருக்கிறார். அந்த சமயத்தில் நயன்தாரா செய்த ஆக்டிங் அப்பொழுது படக்குழுவில் இருந்த அனைவரையும் கண் இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறது.

Also read: கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்.. தளபதி 68-ல் இருந்து விலகிய காரணம் இதுதான்!

அதாவது ரஜினியிடம், இசை என்றால் என்னவென்று தெரியுமா? காசு கொடுத்து வாங்கணும்னு நினைச்சாலும் அதை வாங்க முடியாது என்று திக்கிக் கொண்டு கோபத்தை காட்டி பேசும் அந்த ஒரு நடிப்பு அனைவரையும் வியந்து பார்த்து வைத்திருக்கிறது. இதை பார்த்த ரஜினி அந்த ஸ்பாட்டிலேயே கைத்தட்டி இயக்குனர் பி வாசுவிடம் நம்ம ஆளு நடிப்பில் பின்னி பெடல் எடுத்துட்டாங்க. இவரை போல ஜோதிகாவையும் நடிக்க வைத்துவிடுங்கள் என்று சொல்லி சவால் விட்டிருக்கிறார்.

அந்த அளவிற்கு நடித்த இரண்டாவது படத்திலேயே தன்னுடைய நடிப்பை அற்புதமாக அனைவரும் முன்னாடியும் நிரூபித்துக் காட்டி சூப்பர் ஸ்டாரிடமே கைத்தட்டலையும் வாங்கி அவருடைய பட்டத்தை பெற்று தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்கள் மனதில் பதிந்து விட்டார். அதே நேரத்தில் இவருக்கு போட்டியாகவும் ஜோதிகா தன்னுடைய நடிப்பு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று சந்திரமுகியாக மிரட்டி இருப்பார்.

Also read: தளபதி-68 ல் ஜோதிகா வாய்ப்பை தட்டி பறித்த ஆன்ட்டி நடிகை.. ஓவர் அல்சாட்டியும் பண்ணதால் வந்த விளைவு

Trending News