திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.. செய்வதறியாமல் முழிக்கும் ரெட் ஜெயண்ட்

சமீபத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சமீபகாலமாக தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களை லைக்கா தயாரித்து வருகிறது. இந்த படங்களை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் லைக்காவில் அதிரடி சோதனை உதயநிதிக்கு வலை விரிக்க தான் என பலரும் கூறி வந்தனர். மேலும் லைக்காவை தொடர்ந்து சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

Also Read : மாமன்னன் படம் ஓட வாய்ப்பே இல்ல.. இப்பவே உதயநிதி, வடிவேலு தலையில் இடியை இறங்கிய பிரபலம்

இப்போது மிகப்பெரிய அதிர்ச்சி தரும் விதமாக உதயநிதியின் அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அமலாக்கத் துறையினர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த 25 ஆம் தேதி உதயநிதியின் பவுண்டேஷனின் அசையா சொத்துக்கள் 36.3 கொடி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பவுண்டேஷன் சார்பில் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லல் குழுமம் விவகாரத்தால் இந்த அதிரடி சோதனையை அமலாக்க துறையினர் நடத்தியதாக கூறி உள்ளனர். இதனால் செய்வதறியாமல் உதயநிதி மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இருக்கிறது.

Also Read : நாறிப்போன வடிவேலுவின் பெயர்.. மாமன்னனை காப்பாற்ற உதயநிதி எடுத்திருக்கும் முடிவு

மேலும் ஒரே நாளில் இவ்வளவு பணம் முடக்கப்பட்டதால் மற்ற பரிவர்த்தனைகளும் உதயநிதியால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அடுத்த கட்ட நடவடிக்கையாக உதயநிதியை விசாரணை வளையத்திற்கு கொண்டுவர உள்ளனர்.

இவ்வாறு செந்தில் பாலாஜி, உதயநிதி என திமுகவினரின் சொந்தமான இடங்களில் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவது அவர்களது தொண்டர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சோதனைக்கு பின்னால் யார் இருக்கிறார் என்றும் வினவி வருகிறார்கள்.

ED-Udhayanidhi
ED-udhayanidhi

Also Read : ரெட் ஜெயண்டுக்கு படத்தை இயக்கும் கிருத்திகா உதயநிதி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொன்னியின் செல்வன் நடிகர்

Trending News