புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய்க்கு ஆப்பு அடிக்க போகும் அஜித்..! கட்டதுரைக்கு கட்டம் சரியில்லன்னு உரைத்த பிரபலம்

Astrologer said about actors Rajini, Vijay, Ajith political status: சினிமாவில் பிரபலங்கள் உச்சியை தொட்டபின் அடுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறை அரசியலாக தான் உள்ளது. எம்ஜிஆர், என்டிஆர் என கலைத்துறையின் ஜாம்பவான்கள் பலரும் சினிமாவின் ஊடே அரசியலிலும் கால் பதித்து “என் தேசம் என் மக்கள்” என்று முடிசூடா மன்னனாக விளங்கினர்.

அவர்கள் விதைத்தது இன்றும் நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர். தனது ரசிகர் மன்றங்களின் வாயிலாக பல நலத்திட்ட பணிகள் மேற்கொண்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.

ரஜினி, விஜய், அஜித் என இவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர் ஒருவர் இந்த பிரபலங்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் அரசியல் பிரவேசத்தையும் புட்டு புட்டு வைத்துள்ளார், என்று பிரபல நிருபர் செய்யாறு பாலு அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

Also Read: சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. எவ்வளவு டார்கெட் பண்ணாலும் சிக்காத அஜித்

ரஜினியிடம் அரசியல் பற்றி கேட்டதற்கு கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு? காலத்தின் கையில் அது இருக்கு! என்று கூறியவர் ஒரேடியாக அரசியல் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுப் போய்விட்டார். இதையே அவரும் கூறினாராம்.

அடுத்ததாக விஜய்யை பற்றி ஒன்றும் பெரிதாக ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாராம் நெக்ஸ்ட் நம்ம தலப்பக்கம் திரும்பிய ஜோசியர் அஜித்தின் ஜாதகத்தை பார்த்து மிரண்டு போய்விட்டாராம்.

தேர்தல் வந்தால்  பொறுப்பாக குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்டு செல்லும் அஜித்தை நாம் பார்த்திருப்போம்.  ஆனால் அவருக்கு அவர் அரசியலுக்கு வந்தால் முதல்வராகும் யோகம் கூட இருக்கிறதாம். இது சத்தியமா நடக்கும் என்று வேற சொல்லி பீதியை கிளப்பி இருக்கிறார் இந்த ஜோதிடர்.

யாரு கண்டா ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கூறி சாமானியன் முதல் பிரபலங்கள் வரை பல ரசிகர்களை உள்ளடக்கிய இந்த தன்மான சிங்கம், சைலன்டாக வந்து ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.  தனிக்கட்சி தொடங்குவார் அரசியலில் வெற்றி பெறுவார் என்று ஏகப்பட்ட சூளுரைகளை பிரபல ஜோதிடர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் கூறி மண்ணை கவ்விய கதை நாடறியும். எது வேண்டுமானாலும் நடக்கலாம்  எதற்கும் தமிழக மக்கள் தயாராக இருந்தால் சரிதான்.

கண்ணிமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே!

Also Read: விஜய்யை பத்தி பேசாதீங்க..! விஜயகாந்த் இறப்பிற்கு பின் கொந்தளித்த பிரபலம்

Trending News