சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அசுரன் பட நடிகையை வளைத்துப் போட்ட அருண் விஜய்.. ரசிகர்களை வெறியேத்தும் ஹரி படம்!

சூர்யாவை வைத்து இயக்க இருந்த படம் கைவிட்ட பிறகு ஹரி தற்போது தன்னுடைய மச்சான் அருண் விஜய்யை வைத்து AV33 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அருண் விஜய் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமும் இந்த படம்தானாம். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.

மேலும் காமெடி கதாபாத்திரங்களில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான புகழ் என்பவர் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இது ஒருபுறமிருக்க தற்போது அசுரன் படத்தில் தனுஷுக்கு சிறுவயது ஜோடியாக நடித்த அம்மு அபிராமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அம்மு அபிராமி நடிக்கும் படங்கள் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அம்மு அபிராமி நடிக்கும் படங்களில் அவரை பெரும்பாலும் கொன்று விடுவது போன்ற காட்சிகளே அமைக்கப்படுகிறது எதேச்சையாக நடந்த ஒன்று. இந்நிலையில் ரசிகர்கள் இந்த படத்திலாவது அம்மு அபிராமியை கொல்லாமல் இருப்பார்களா என எதிர்பார்க்கின்றனர்.

ammu-abirami-in-av33
ammu-abirami-in-av33

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களை போலவே ஒவ்வொரு நடிகர்களையும் பார்த்து பார்த்து அருண் விஜய் படத்திற்கு தேர்வு செய்து வருகிறார் ஹரி. மேலும் அருண் விஜய்யை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றுவதற்கும் மெனக்கெட்டு வருகிறாராம்.

Trending News