ஒரு காலத்தில் பிரபல நடிகராக வலம் வந்து பின்னர் மார்க்கெட் இல்லாமல் தடுமாறி தற்போது ரீ என்ட்ரி கொடுத்த கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோரை தொடர்ந்து மாதவனும் அந்த லிஸ்டில் இடம் பெறுகிறார். இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து பின்னர் விக்ரம் வேதா படத்தின் மூலம் சூப்பர் வசூல் நாயகனாக மாறினார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அமேசான் தளத்தில் மட்டுமே மாதவன் நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா என்ற இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களிலும் மாதவனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நேரடி ஓடிடி ரிலீஸ் என்பதால் வெற்றியா? தோல்வியா? என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்நிலையில் தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அடுத்தடுத்து தன்னுடைய படங்களுக்கான இயக்குனர்களையும் கதைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறாராம் மாதவன்.
அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு படம் நடிக்க உள்ளாராம். இதில் அசுரன் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற மஞ்சுவாரியர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். மஞ்சு வாரியாருக்கு இதுதான் முதல் பாலிவுட் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை சமீபத்தில் கேரளாவில் நடந்த த பிரிஸ்ட் என்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மம்முட்டி நடித்துள்ள இந்த படத்தில் மாதவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.