தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அசுரன். வியாபார ரீதியாக மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக தனுஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இதனையடுத்து இப்படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ், தனுஷ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான நாரப்பா படத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தனுஷ் அளவிற்கு யாராலும் நடிக்க முடியாது என தமிழ் ரசிகர்கள் இணையதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் நாரப்பா படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம்.
தமிழில் வெளியான அசுரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் அசுரன் படத்தில் இருந்து இரண்டு பாடல்களையும், தீம் மியூசிக்கையும் தெலுங்கு பட குழுவினர் பயன்படுத்தியுள்ளனர்.
ஆனால் இதற்காக ஜி.வி.பிரகாஷுக்கு எந்த தொகையும் கொடுக்கவில்லையாம். தமிழில் தயாரித்த கலைப்புலி தாணுவே தெலுங்கு படத்தையும் தயாரித்துள்ளதால் இவ்வாறு பணம் எதுவும் கொடுக்காமல் பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜி.வி.பிரகாஷ் பயங்கர அதிருப்தியில் உள்ளார்.