தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தனுஷின் சினிமா கேரியரில் முதல் நூறு கோடி வசூல் செய்த படமாக மாறியது.
மேலும் இந்த படம் தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தான் தெலுங்கிலும் நாரப்பா என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் நாரப்பா படத்தில் வெங்கடேஷ் நடிக்கும் கதாபாத்திரத்தின் கெட்டப் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வயதான தோற்றத்திற்கு மிகவும் பக்காவாக பொருந்தியிருந்த அந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது.
ஆனால் சமீபத்தில் அசுரன் படத்தில் தனுஷ் இளவயது கேரக்டரில் நடித்தது போல வெங்கடேஷ் ட்ரை பண்ணியுள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் பார்ப்பதற்கு வெங்கடேஷ் இளமை தோற்றத்தில் இல்லை என்பதே படத்தின் குறையாக மாறிவிட்டது.
தனுஷின் உடல்வாகுக்கு அந்த இளமை கதாபாத்திரம் பக்காவாக பொருந்தியிருந்தது. ஆனால் வெங்கடேஷ் கட்டம் போட்ட சட்டை போட்டு டை அடித்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தவில்லை. இதற்கு பதிலாக ஏதேனும் ஒரு இளம் நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இளமை தோற்றத்திற்கு பொருந்தாத வெங்கடேஷ் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கண்டிப்பாக நாரப்பா படத்தை பிளாக்பஸ்டர் வெற்றியாக கொடுத்து விடுவேன் என நம்பிக்கையுடன் கூறி வருகிறாராம்.