வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொல நடுங்க வைத்த அஸ்வின்ஸ்.. 15 நாட்களில் அள்ளிய மொத்த வசூல் ரிப்போர்ட்

Asvins: தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் தான் அஸ்வின்ஸ். மிரள வைக்கும் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியான முதல் நாளிலேயே பலரின் கவனத்தையும் பெற்ற இப்படம் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதன் மூலம் வசூலிலும் லாபம் பார்த்துள்ளது. எப்போதுமே மிரள வைக்கும் பேய் படங்களை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள்.

Also read: இந்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாராகும் 8 படங்கள்.. ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு

ஒரு பக்கம் பயம் இருந்தாலும் மறுபக்கம் அந்த பயத்தோடு படத்தை பார்த்து ரசிப்பவர்களும் உண்டு. அதன் காரணமாகவே இது போன்ற ஹாரர் படங்களை கொடுப்பதில் பல இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அறிமுக இயக்குனர் தருண் தேஜா இந்த படத்தின் மூலம் தன்னுடைய பெயரை நிலை நிறுத்தி இருக்கிறார்.

யூடியூபர்களாக இருக்கும் நண்பர்கள் ஆபத்தான பகுதியாக இருக்கும் லண்டன் தீவு பகுதியில் உள்ள ஒரு மேன்ஷனுக்கு படம் பிடிக்க செல்கின்றனர். அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சந்திக்கும் அமானுஷ்யங்களும் தான் இப்படத்தின் கதை.

Also read: Asvins Movie Review- கொல நடுங்க வைத்த திரில்லர் படம்.. அமானுஷ்யம், அஸ்வின்ஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

வித்தியாசமான முறையில் மிரட்டும் சவுண்ட் எஃபெக்டுடன் வெளிவந்துள்ள இப்படம் பார்ப்பவர்களை கொல நடுங்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 15 நாட்களிலேயே அஸ்வின்ஸ் நல்ல வசூல் லாபமும் அடைந்துள்ளது. அதன் படி 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது 3.9 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதனால் குஷியாகி இருக்கும் படக்குழுவினர் தற்போது படம் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தை திரையிட்ட உரிமையாளர்களும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தங்களுக்கு கிடைத்துள்ள லாபத்தால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Also read: விமர்சன ரீதியாக அடிபட்டாலும் வசூல் ரீதியாக டஃப் கொடுக்கும் மாமன்னன்.. கல்லாப்பெட்டியை நிரப்பிய உதயநிதி

Trending News