புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இப்பவும் எனக்கு ஹீரோயின் மவுசு இருக்கு.. 52 வயதில் பகீர் கிளப்பும் கமலின் தோழி

திருமணமாகி விட்டாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டி விட்டாலோ சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு அம்மா, அண்ணி போன்ற கேரக்டர்கள் தான் கொடுக்கப்படும். குஷ்பூ, சிம்ரன் போன்ற கொடிகட்டி பறந்த நடிகைகளே இப்போது அது போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகின்றனர்.

அப்படி இருக்கும்போது நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு மட்டும் இப்போதும் ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். 52 வயதை கடந்திருக்கும் இவருக்கு தற்போது 40 வயதை கடந்த ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் வருவதாக கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.

Also read: ரஜினி, கமல் கைவிட்ட அந்த மாதிரியான படங்கள்.. வாய்ப்பில்லை என வெளிப்படையாக பேசிய சூப்பர் ஸ்டார்

ஆனால் அப்படி ஹீரோயின் ஆக நடித்த வந்த வாய்ப்புகளை எல்லாம் அவர் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் மறுத்துவிட்டாராம். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நெருங்கிய தோழியாக இருக்கும் இவர் அவருக்கு ஜோடியாக சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்திலும் நடிக்க கமிட்டானார்.

ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். அதில் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக அசத்தலான உடை, மேக்கப் என்று அவர் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

Also read: ரம்யா கிருஷ்ணனின் தாயாரை துப்பாக்கியால் சுட்ட பிரபலம்.. பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்த நடிகர்

அது மட்டுமல்லாமல் தன்னுடைய சோசியல் மீடியாவில் இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் வகையிலான போட்டோக்களையும் இவர் பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த பலரும் உங்களுக்கு இன்னும் வயசு ஏறவே இல்லை என்று கிண்டலாக கூறி வருகின்றனர்.

இப்படி மனதளவில் இளமையாகவே இருக்கும் ரம்யா கிருஷ்ணன் ஹீரோயின் சான்ஸ் வந்தால் நடிக்கவும் தயாராக இருக்கிறார். ஆனால் அவர் வெயிட்டான கேரக்டராக இருந்தால் மட்டும் தான் நடிப்பேன் என்று இயக்குனர்களிடம் கறாராக கூறி விடுகிறாராம். அந்த வகையில் அம்மணியை விரைவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏதாவது ஒரு படத்தில் நாம் பார்க்கலாம்.

Also read: நடிக்க விடாமல் அசிங்கப்படுத்திய கமல்.. சரியான நேரத்தில் பழி வாங்கிய பிரபலம்

Trending News