புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று வீட்டில் விளக்கேற்றுங்கள்.. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வேண்டுகோள்!

வரும் பிப்ரவரி 24 தேதியன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,

ஜெயலலிதா அவர்களின் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் மரியாதை செய்ய உள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளன்று மாலை 6 மணிக்கு இல்லங்களில் விளக்கு ஏற்றும்படி அதிமுகவினருக்கு, தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அதில், ‘உயிர் மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான நல பணிகளையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காப்பேன்.

EPS-OPS

இது அம்மாவின் மீது ஆணை என்ற உறுதிமொழியை எங்களுடன் இணைந்து நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றுஅதிமுக தொண்டர்களுக்கும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இணைந்து கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending News