Director Atlee: பொதுவாக அட்லி எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் கமர்சியல் படமாகவும், ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி தரமான பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்து வெற்றி பெறுபவர். இவர் படங்கள் அனைத்தும் வெற்றி அடைந்து விடும் என்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கொடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவர் பல விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார்.
அதாவது இவர் என்னதான் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி படங்களை கொடுத்தாலும் அந்தக் கதைகள் அனைத்தும் எங்கேயோ இருந்த படத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்து எடுக்கிறார் என்ற விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறார். அதனால் இயக்குனர் அட்லி என்றாலே காப்பி கேட் தான் என்ற முத்திரையை பெற்று இருக்கிறார்.
இதை பற்றி பத்திரிகையாளர் இவரிடம் கேட்டதற்கு அதற்கு தகுந்த பதிலை இவர் கொடுத்து இதுவரை ஏற்பட்ட பஞ்சாயத்துக்கு முடிவு கட்டி இருக்கிறார். அதாவது வித்தியாசமான படங்களை எடுப்பதிலும், ஆக்சன் மற்றும் சமூகப் பிரச்சினை சம்பந்தமான கருத்துக்களை படத்தில் கொண்டு வருவதற்கு என் நண்பர்களான லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பா ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எடுக்கக்கூடிய படங்களில் வெவ்வேறு இடங்களில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை சமூகத்திற்கு வட்டமிட்டு காட்டும் நோக்கில் அவர்கள் பயணித்து வருகிறார்கள். அதனால் இந்த மாதிரி கதைக்கு அவர்கள் போதும். எனக்கு தகுந்த மாதிரி கமர்சியல் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படங்களை மட்டும் கொடுப்பதில் தான் மகிழ்ச்சி.
மேலும் என் படத்தை நம்பி பார்க்க வருபவர்களை ஏமாற்றம் அடைய வைக்க கூடாது என்பதில் தான் என்னுடைய முழு கவனமும் இருக்கும். அதனால் அதற்கேற்ற மாதிரி படங்களை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முழு கவனம் இருக்கும் என்று பத்திரிகையாளர்களிடம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இவர் என்னதான் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக எடுக்கிறேன் என்று சொன்னாலும் இவர் படங்கள் அனைத்தும் காப்பி அடித்து தான் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக இவர் கொடுத்த விளக்கத்தை எதையும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. மேலும் இன்று ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஜவான் படம் எந்த அளவிற்கு அட்லிக்கு கை கொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.
Also read: பயந்த மாதிரியே முத்தக் காட்சியுடன் வெளிவந்த ஜவான் பாடல்.. அட்லி மீது கொல காண்டில் இருக்கும் விக்கி