வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இனி சின்ராச கையிலையே பிடிக்க முடியாது.. Green signal கொடுத்த அதர்வா

அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலர் நடிக்க, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம், நிறங்கள் மூன்று. இந்த படமாவது அதர்வாவுக்கு கம் பேக் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. கார்த்திக் நரேன் இதற்க்கு முன்பு துருவங்கள் பதினாறு என்ற தரமான படத்தை கொடுத்தவர். அதனால், நிச்சயம் சிறப்பான கதையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது ஒரு சில முக்கிய அப்டேட்களை அதர்வா கொடுத்துள்ளார். `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் எனக்கு பிடிக்கும். அந்த படம் பார்த்ததுல இருந்து எனக்கு அவர்கூட படம் பண்ணனும்னு ஆசை இருந்தது. இந்த படத்துல நடிக்கும்போது எனக்கு ரொம்ப பயமா இருந்தது. ஏன்னா, என்னோட உண்மையான charecter-க்கு தலைகீழான ஒரு charecter-ல் நடித்துள்ளேன்.

கார்த்திக் நரேன் மேல இருந்த நம்பிக்கையில் ஓகே சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து ரசிகர்கள், “நீங்கள் ஓகே சொல்லிவிட்டீர்கள் என்று சொல்வதை விட, அவர் ஓகே என்று தான் சொல்லி படம் எடுத்தது பெரிய விஷயம் தான். ஏன் என்றால் நீங்கள் படபிடிப்பு தளத்தில் எவ்வளவு ஈடுபாடுடன் இருப்பீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இனி சின்ராச கையிலையே பிடிக்க முடியாது..

இந்த நிலையில், தற்போது, அவருக்கு நல்ல காலம் பிறந்தது என்றே கூறலாம். ஏன் என்றால், நல்ல இயக்குனர் நல்ல படம் அமைந்ததோடு இவருக்கு சீக்கிரமே கால் கட்டு போட முடிவு செய்துள்ளனர் குடும்பத்தினர். இது தொடர்பாகவும் ஒரு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் அதர்வா.

தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், “எல்லோரும் திருமணம் எப்போது என்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். சீக்கிரமே திருமணம் செய்வேன்.. அதற்கான வேலை தான் நடந்துகொண்டிருக்கிறது ” என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள், “அவ்வளவு தான்.. இனி சின்ராச கையிலையே பிடிக்க முடியாது.” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News