வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அடுத்த சிம்புவாக மாறும் அதர்வா.. இப்படியே போனா அவ்வளவுதான் பாஸ்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. பல டாப் நடிகர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் களமிறங்கி உள்ளனர். அந்த வரிசையில் மிகவும் முக்கியமான நடிகர் என்றால் அது அதர்வா முரளி தான். 90களில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் முரளியின் மகன் தான் அதர்வா.

பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகள் மூலம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் பட்டியலில் ஒரு நிலையான இடத்தில் உள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே போன்ற படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

இதுதவிர இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் டிரிக்கர் (TRIGGER) என்ற புதிய படத்திலும் அதர்வா நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். ஓரளவிற்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அதர்வா நிச்சயம் அவர் தந்தையை போல ஒரு டாப் நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் சமீபகாலமாக அதர்வாவின் நடவடிக்கைகள் சரியில்லை என கூறப்படுகிறது. சிகரெட் சரக்கு போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது, படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, சில நேரங்களில் வராமல் இருப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதுதவிர காதல் பெயரை சொல்லி தேவையில்லாமல் நடிகைகள் பின்னாடி சுற்றி வருகிறாராம். இதனால் அதர்வாவிற்கு கிடைத்த பல நல்ல பட வாய்ப்புகள் அவர் கையைவிட்டு சென்று விட்டதாம். இவரின் இந்த நடவடிக்கையால் அவருக்கு பட வாய்ப்பு அளிக்க தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம்.

இதனால் என்ன செய்வதென தெரியாமல் தவித்த அதர்வா தனது தந்தை அதாவது நடிகர் முரளியின் தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து தன்னை வைத்து படம் எடுக்குமாறு கேட்டு வருகிறாராம். ஒழுக்கமாக இருந்திருந்தால் பட வாய்ப்புகள் இவரை தேடி வந்திருக்கும். இப்போது இந்த நிலை தேவையா? சிம்புவை பார்த்தாவது திருந்துங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News