ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆல் இன் ஆல் ரவுண்டு கட்டும் அதர்வா.. கம் பேக்-னா இப்படி இருக்கணும்

பல நாட்களாக இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் நடிகர் அதர்வா. இந்த நிலையில் சமீபத்தில் இவர் எடுக்க போகிறார் என்றெல்லாம் தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், தற்போது முக்கியமான ஒரு படத்தில் கமிட் ஆகி கம் பேக் கொடுத்திருக்கிறார் நடிகர் அதர்வா

நடிகர் அதர்வா 2010 ஆம் ஆண்டு முதல் பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பரதேசி படம் இவருக்கு ஒரு முக்கியமான படமாக அமைந்தது. கடைசியாக இவர் நடித்தது பட்டத்து அரசன் திரைப்படம். அதற்க்கு பிறகு அவருக்கு எந்த படமும் பெரிதாக அமையவில்லை. வசூல் ரீதியாக இவருக்கு இதுவரை எந்த படமும் கை கொடுக்காததனால், இவருக்கு படம் சரியாக அமையவில்லை.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா

அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைவசம் பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் அவர் அடுத்து தானே ஒரு படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே அவருக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தற்போது, அதற்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளார். இந்த நிலையில், அடுத்ததாக முக்கியமான ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் அதர்வா. அதுவும் பெரிதாக அவரை தற்போது எந்த படத்திலும் பார்க்காத ரசிகர்களுக்கு இது ஒரு குதுகளத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதா கொங்காராவுடன் கூட்டணி போடும் அதர்வா

அமரன் படத்தை தொடர்ந்து எ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் புறநானூறு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்திகேயனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல் வெளியானது.

இந்த நிலையில், அழகிலும், ஸ்டைலிலும் இவர்களுக்கு tough கொடுக்கும், இன்னொரு முக்கியமான நடிகரும் இணையவிருக்கிறார். ஆம், லோகேஷ் கனகராஜ் பிசி இயக்குனராக வளம் வருவதால், அவரால் இன்னொரு ஹீரோவாக நடிக்க முடியாது என்று கூறி விட்டார். இதை தொடர்ந்து நடிகர் அதர்வாவை இன்னொரு ஹீரோவாக களமிறக்க இருக்கிறார் சுதா கொங்காரா. கண்டிப்பாக இது ஒரு தரமான கம் பேக் ஆக அதர்வாவுக்கு அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Trending News