சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தனுஷ், சிம்பு கூட இல்ல இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. அடித்து சொல்லும் ராதாரவி

வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. தற்போது  திறமையைத் தாண்டி அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.  அப்படி ராதாரவி தற்போது ஒரு வாரிசு நடிகரை சூப்பர் ஸ்டார் என்று சைகை காட்டி உள்ளார். அதுவும் சிம்பு தனுஷை விட இவர் நடிப்பை பார்த்து அழுதே விட்டாராம்.

தமிழ் சினிமாவில் பானாகாத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதர்வா. முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் முரளியின் பெயரை காப்பாற்றி இருந்தார். அதன் பிறகு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் பெற்றார். தற்போது அதர்வாவுடன் ராதாரவி ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார். பேட்டி ஒன்றில் ராதாரவி, அதர்வா பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் சிவாஜி, கமல் படங்களுக்கு அடுத்தபடியாக அதர்வா படத்தைப் பார்த்து ராதாரவி அழுததாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நான் சீக்கிரம் அழ கூடியவன் அல்ல, பல படங்களை விமர்சித்து உள்ளேன் ஆனால் அதர்வா படத்தை பார்த்து நான் அழுதுவிட்டேன். அந்தளவுக்கு சிறந்த நடிகர் அதர்வா என ராதாரவி புகழ்ந்துள்ளார்.

ஆனால் அதர்வாக்கு பல திறமைகள் இருந்தும் ஒரு சில செய்கையால் அவருடைய பல படங்கள் பறிபோகிறது. சமீபகாலமாக அதர்வா படப்பிடிப்புக்கு வரும் பொழுது மது அருந்திவிட்டு வருகிறார். இதனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள் எரிச்சலடைகிறார்கள்.

ஆரம்பத்தில் அடக்கமாக இருந்த அதர்வா தற்போது பல படங்களில் வெற்றி கண்ட உடன் இதுபோன்ற செய்வது சினிமா வட்டாரத்தில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இயக்குனர்களும் அதர்வாவை வைத்து படம் இயக்க தயங்குகிறார்கள்.

முரளி போன்ற ஒரு நல்ல நடிகரின் இடத்தை அதர்வா நிரப்புவார் என்று நினைத்த ரசிகர்களுக்கு அதர்வா ஏமாற்றத்தை தந்துள்ளார். ஆனாலும் எப்படி அஜித், விஜய்யை விட அதர்வா சூப்பர் ஸ்டாரா வருவாருன்னு ராதாரவி கூறியிருப்பார் என்று  சற்று குழப்பமாக தான் உள்ளது.

Trending News