வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சைக்கோ இயக்குனருடன் முதல் முறையாக இணையும் அதர்வா.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய கூட்டணி

வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்து பிசியான நடிகராக வலம் வந்தாலும் அதர்வா இன்னும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் இணையாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகராகவே இருந்து வருகிறார்.

அதைப்போல அதர்வாவின் படங்கள் அனைத்துமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதில்லை. பல வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் இப்போது தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் அதர்வா.

இந்நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். அந்த வகையில் அடுத்ததாக வெளியாக இருக்கும் குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, அட்ரஸ் போன்ற படங்கள் வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறார்.

இதனால் அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முதல்முறையாக மிஸ்கினுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற உள்ளாராம் அதர்வா. மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து பிசாசு 2 என்ற படத்தை எடுத்து வருகிறார்.

mysskin-atharvaa-cinemapettai
mysskin-atharvaa-cinemapettai

பிசாசு 2 படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக மிஷ்கின், அருண் விஜய் அல்லது சிம்பு படத்தை இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென அதர்வாவுடன் கூட்டணி சேர்ந்தது அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

ஆனால் அதர்வாவை பொறுத்தவரை இது ஒரு சந்தோஷமான செய்திதான். மிஸ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான சைக்கோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பிசாசு 2 படத்துக்கு நல்ல எதிர்பார்ப்புள்ளது. இதன் காரணமாக மிஸ்கின் படத்தின் மூலம் தனக்கு ஒரு நல்ல மார்க்கெட் கிடைக்கும் என நம்புகிறார் அதர்வா.

Trending News