வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

2 வது முறையாக வெற்றி இயக்குனருடன் கூட்டணி போடும் அதர்வா.. அவரு விமலுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர்

வாரிசு நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகராக வலம் வருபவர் அதர்வா. நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகராக மாறுவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அதர்வா நடிப்பில் பல படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருந்தாலும் எந்தப் படமும் வெளியாகவில்லை. அந்த வகையில் குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

இந்நிலையில் அதர்வாவுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றிப் படம் தேவை என்பதை உணர்ந்து தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது அதர்வா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதர்வா மற்றும் சற்குணம் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்ற திரைப்படம் சண்டிவீரன். பாலா தயாரித்துள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல முறையில் சென்றது.

atharvaa-cinemapettai
atharvaa-cinemapettai

இந்நிலையில் அடுத்ததாக லைகா தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாம். லைகா நிறுவனம் சமீபகாலமாக குறைந்த பட்ஜெட்டில் நல்ல நல்ல படங்களை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்கு அச்சாரம் போடும் வகையில் இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கின்றனர். சற்குணம் எடுத்த களவாணி, வாகை சூடவா போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்து வெற்றி பெற்றவை. அந்த வகையில் இந்தப் படமும் இடம்பெறும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Trending News