வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அதர்வா தம்பி, இந்த பேராசை உங்கள சீக்கிரம் அழிச்சுரும்.. எச்சரிக்கும் தயாரிப்பாளர்கள்

சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அதர்வா சமீபகாலமாக சம்பள விஷயத்தில் மிகவும் பிடிவாதம் பண்ணுவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் அதர்வா படத்தை பார்ப்பதால் அவரது படங்கள் பட்ஜெட்டை விட அதிக லாபங்கள் கொடுத்து வருகின்றன. இதன்காரணமாகவே அதர்வாவை வைத்து படம் தயாரிக்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.

அதைப் பயன்படுத்திய தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கி முடிவு செய்துள்ளாராம் அதர்வா. 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்னும் கோடியில் சம்பளம் வாங்கவில்லை.

தயாரிப்பாளர்களின் கையை கடிக்காத ஹீரோ என்ற பெயருடன் வலம் வந்த அதர்வா தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட சுமைகளை சுமத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதர்வா தற்போது சம்பள விஷயத்தில் ஒரு கோடி வேண்டும் என ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் அடம்பிடித்து வருகிறாராம்.

சம்பளத்தோடு ஜிஎஸ்டி-யும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது கட்டளையாம். ஏற்கனவே அதிக அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அதர்வா தன்னுடைய பிடிவாதத்தால் தனக்கு வரவிருந்த ஒரு படத்தை குக் வித் கோமாளியில் புகழ்பெற்ற அஸ்வின் என்பவரிடம் இழந்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

atharvaa-cinemapettai
atharvaa-cinemapettai

Trending News