வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வீடியோ வெளியிட்ட அதுல்யா.. சொக்கிப் போன ரசிகர்கள்!

டப்ஸ்மாஷ் குறும்படங்கள் மூலம் பிரபலமான அதுல்யா ரவி, காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நாடோடிகள் 2, ஏமாலி, கேப்மாரி, போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது, சாந்தனு உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்போதுமே பிஸியாக இருக்கும் அதுல்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் அதுல்யா ரவி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெறிக்க விட்டிருந்தார். தற்போது அதேபோல் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இம்முறை ஒர்க்கவுட் வீடியோ அல்லாமல், பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

athulya ravi
athulya ravi

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனு உடன் இணைந்து நடனமாடும் வீடியோதான் அது. இதனைக் கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவிப்பதோடு மட்டுமல்லாமல், ஏகபோகத்திற்கு பாராட்டி வருகின்றனர்.

இப்போலாம் நடிகைகள் படங்கள் மூலமா பிரபலமாகுறாங்களோ, இல்லையோ இந்த மாதிரி சோசியல் மீடியால போட்டோவும், வீடியோவும் போட்டே பிரபலமாகிடறாங்க.

Trending News