வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

1000 கோடி வசூலுக்குப் பின் மீண்டும் இணையும் அட்லி கூட்டணி.. 2200 கோடி பட்ஜெட்டில் கமிட்டான ஷாருக்கான்

ShahRukhKhan and Atlee: வித்தியாசமான கதைகளுடன் மிகப்பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்களில் சற்று மாறுபட்டவர் தான் இயக்குனர் அட்லி. இவரை பொறுத்தவரை காசு கொடுத்து படம் பார்க்க வரும் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ண வேண்டும். அதற்காக கமர்சியல் கதையை எடுக்கக் கூடியவர்.

அந்த வகையில் இதுவரை இவர் எடுத்த படங்கள் அனைத்தும் மக்கள் கொண்டாடும் வகையில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி அடைந்திருக்கிறது. அதனாலேயே பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து முதன் முதலில் எடுத்த ஜவான் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி 1000கோடி வசூலை வாரி குவித்தது. அட்லி தற்போது ஷாருக்கானின் வெற்றி இயக்குனராக பார்க்கப்படுகிறார்.

அதனால் இவரை நம்பி கோடிக்கணக்கான பணத்தையும் செலவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் இரண்டு ப்ராஜெக்ட்டில் கூட்டணி வைக்கப் போகிறார். அதில் முதல் படம் ஷாருக்கான் கமல் சேர்ந்து நடிக்கப் போகும் படம்.

Also read: முதல் நாளே உலக அளவில் வசூல் வேட்டையாடிய 6 படங்கள்.. பாலிவுட்டை கதிகலங்க செய்த அட்லி

இதை அட்லி தான் இயக்கப் போகிறார். அந்த வகையில் இப்படத்திற்கான பட்ஜெட் கிட்டத்தட்ட 1,200 கோடி அளவிற்கு பண்ணுவதற்கு திட்டத்தை போட்டு இருக்கிறார். அடுத்ததாக இரண்டாவது படம் ஷாருக்கான் மற்றும் விஜய் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட். இப்படத்திற்கான பட்ஜெட் 1000 கோடிக்கு போடப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் ஷாருக்கான் அட்லியை நம்பி 2200 கோடி பணத்தை வாரி இறைக்க போகிறார். இதில் அட்லி எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் காபி கேட் படமாக தான் இருக்கும். இருந்தாலும் இவர் பாணியில் எப்படி எடுக்கணுமோ அதற்கேற்ற மாதிரி எடுத்து வசூலில் லாபத்தை பார்ப்பது அட்லிக்கு கைவந்த கலை.

இந்த வருடம் எப்படி ஷாருக்கானுக்கு பதான் மற்றும் ஜவான் படங்களின் மூலம் ஜாக்பாட் அடித்ததோ, அதே மாதிரி அடுத்த வருடமும் நிச்சயம் லாபத்தை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் ஷாருகானின் டங்கி என்கிற படம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை பார்க்கும்பொழுது செம மாசாக இருக்கிறது. அதனால் இப்படமும் கண்டிப்பாக ஷாருக்கானுக்கு வெற்றி படமாக அமையும்.

Also read: உயிர் பயத்தில் அட்லீ பட கிங் காங்.. Y+ பாதுகாப்பில் ஷாருக்கான், காரணம் கேட்டு அதிர்ந்த திரையுலகம்

Trending News