செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பாலிவுட்டிலும் பெயரை கெடுத்து கொள்ளும் அட்லி.. முன்கூட்டியே விழித்துக் கொண்ட ஷாருக்கான்

கோலிவுட்டில் தளபதி விஜயை வைத்து  தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களின் மூலம் ஹாட்ரிக் வெற்றிகளை குவித்த இளம் இயக்குனர் அட்லி, தற்போது பாலிவுட்டில் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட 3 வருடங்களாக மும்பையில் இருக்கிற அட்லி, சாருக்கான் எஜமான் படத்தை செதுக்கி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் அட்லிக்கும், ஷாரூக்கானுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வருகின்றது.

Also Read: ரெண்டே படம் பாலிவுட்டிலே செட்டிலாகும் அட்லீ.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்

அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கும் ஜவான் படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பிரியாமணி, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஜவான் படம் திரைக்கு வர இருக்கிறது. அட்லி ஜவான் படத்திற்காக அதிகமாக செலவு செய்கிறாராம். இதனை ஷாருக்கான் கண்டித்துள்ளதாக தெரிகின்றது.

Also Read: பாலிவுட்டிலும் வேலையை காட்டிய அட்லி.. விஜயகாந்த் படத்தால் ஷாருக்கானுக்கு வந்த பிரச்சினை

மேலும் படத்திற்க்கு எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் செலவு செய்தது எல்லாம் திரையில் தெரியவேண்டும் எனவும் கூறியுள்ளாராம் ஷாருக்கான். எனவே ஒரு முறை அட்லியை பற்றி தெரிந்து கொண்ட ஷாருக்கான் தற்போது 2வது படத்தில் முன்கூட்டியே விழித்துக் கொண்டு உஷாராக இருக்கிறார்.

இதனால் அட்லி சற்று அப்செட்டாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.  ஆனால் இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அட்லி பழைய படங்களை காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார் என்று அவன் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், மீண்டும் இப்படிப்பட்ட சர்ச்சையை சிக்கி கொண்டிருப்பது அவருடைய சினிமா கேரியர் பாதிக்கவும் வாய்ப்புள்ளது .

Also Read: பொன்னியின் செல்வனை விட டபுள் மடங்கு வியாபாரமான ஜவான்.. பாலிவுட்டில் கெத்து காட்டும் அட்லி

Trending News