வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஷாருக்கான், அட்லி கூட்டணியில் மிரள வைக்க போகும் சேசிங்.. தளபதியின் இந்த படத்தின் உல்டாவா இருக்குமோ.?

சினிமாவில் இயக்குநர் அட்லீயின் வளர்ச்சி அபரிமிதமானது. யாருமே நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் திருப்பிய அட்லிக்கு, அதன் பின் வரிசையாக தளபதியின் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

அட்லீ மற்றும் ஷாருக்கான் இணையும் புதிய படத்தை பற்றிய அப்டேட் தான் தற்போது இணையதளத்தில் செம வைரலாக பரவி வருகிறது. மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர்னாக உருவாகும் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

ஹெலிகாப்டர் சேசிங்: அட்லீ மனைவி ப்ரியா சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்காக அட்லி தனது உதவி இயக்குனர்களுடன் டிஸ்கஷனில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டர் சேசிங் இருப்பது போல காட்சியை அவர் தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கு விலகி கொண்டிருப்பது போல் தெரிகிறது.

atlee-next-movie-discussion
atlee-next-movie-discussion

தமிழில் சும்மாவே தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட செலவு செய்து விடுவார். பாலிவுட் போனால் சும்மா இருப்பாரா. தமிழிலேயே 100 கோடி 200 கோடி செலவு வைக்கும் அட்லீ பாலிவுட்டில் ஆயிரம் கோடி செலவு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

35 கோடி சம்பளம் வாங்கும் அட்லீ: மெர்சல் படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கிய அட்லீ அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கிய பிகில் படத்திற்கு 20 கோடி வாங்கினார். இந்நிலையில் அட்லீ தற்போது நேரடியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

shankar-atlee-cinemapettai-01
shankar-atlee-cinemapettai-01

இதற்காக அட்லீக்கு 35 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இது தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வரும் ஷங்கரை விட 10 கோடி அதிகம் என்கிறார்கள் சம்பள விவரம் தெரிந்த கோலிவுட் வாசிகள்.

படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா: தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்திற்கும்  ரசிகர்களிடையே ஏகபோகமாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

vignesh-shivan-nayanthara-2
vignesh-shivan-nayanthara-2

தற்போது நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா, பாலிவுட் மெகா ஸ்டாரான ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அழகிய தமிழ் மகன் படத்தின் உல்டாவா இருக்குமோ: அட்லீ மற்றும் சாருக்கான் இணையும் புதிய படத்தை பற்றிய அப்டேட் தான் தற்போது இணையதளத்தில் செம வைரலாக பரவி வருகிறது. துப்பறியும் போலீஸ் மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் மிரட்ட உள்ளாராம். ஒரு சாருக்கான் நல்லவர், இன்னொரு ஷாருக்கான் கெட்டவர் என்பதை போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம். விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் கூட இதே கதைதான்.

என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவிலிருந்து ஒரு இயக்குனர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை இயக்குவது பெருமைக்குரிய விஷயம் தானே.

Trending News