ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யும் இல்ல அல்லு அர்ஜுனும் இல்ல அட்லி வளைத்த ரோமியோ.. மும்பையில் வேட்டைக்கு தயாரான கருஞ்சிறுத்தை

Atlee Booked Next Bollywood Romeo: பாலிவுட், டோலிவுட் மொத்தமும் இப்பொழுது அட்லீக்காக காத்துக் கொண்டிருக்கிறது. தோனி முதல் அம்பானி வரை அட்லீயை தெரியாத பெரிய ஆட்களே கிடையாது. அந்த அளவிற்கு மொத்த மும்பையிலும் ரசிகர்களை குவித்து வைத்திருக்கிறார்.

அட்லியின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் அவரின் திறமை தான். கோலிவுட்டில் விஜய்யின் செல்ல பிள்ளையாக வலம் வந்தவர். மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி அசத்தினார். இவர் ஏற்கனவே பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இடம் அசோசியேட் டைரக்டராக வேலை செய்தார்.

மும்பையில் வேட்டைக்கு தயாரான கருஞ்சிறுத்தை

ஷாருக்கான் உடன் அட்லிக்கு நெருக்கம் கிடைக்கவே இவர் பாலிவுட் பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார். மும்பையிலும் ஆபீஸை போட்டு திமிங்கலமாகிய சாருக்கானை வளைத்தார். சாருக்கானை வைத்து ஆயிரம் கோடி வசூலை கொடுத்த ஜவான் படத்தை இயக்கினார்.

ஜவான் படத்தின் வசூலால் ஒட்டுமொத்த பாலிவுட் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என மிரட்டினார். பல ஹீரோக்கள் இவரை அழைத்து படம் பண்ணலாம் என தங்களது கால் சீட்டை கொடுத்து வருகின்றனர்.

முதற்கட்டமாக பாலிவுட் ரோமியோவான ரன்வீர் சிங்கை வைத்து படம் பண்ண போகிறார். இவருக்கு ஒரு கதை சொல்லி, அது பிடித்துப் போகவே இந்த ப்ராஜெக்ட் ரெடியாகிறது. இவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொள்கின்றனர். ஆறு முறை மீட்டிங் நடந்துள்ளது.

Trending News