புதன்கிழமை, ஜனவரி 8, 2025

எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க?, நயன் அக்கா சொல்லி கொடுத்த பாடம், அடுத்த முதலீடு எங்க தெரியுமா?

Atlee: ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று விளையாட்டாக சொல்வார்கள். அதை அட்லி ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டார் போல.

இப்போதுதான் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாதிரி இருக்குது. அதுக்குள்ள தமிழில் அடுத்தடுத்து விஜயுடன் படம், இந்தியில் ஷாருக்கான் உடன் படம் என பல மடங்கு உயர்ந்து விட்டார்.

அது மட்டும் இல்லாமல் ஏ பார் ஆப்பிள் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார். நயன்தாரா பாணியில் சம்பாதிக்கும் பணத்தை மொத்தமாக முதலீடு செய்கிறார்.

அவருடைய மனைவி பிரியா அட்லி கடந்த வருடம் தான் ரெட் நாட் என்னும் ஆடை வடிவமைப்பு தொழிலை தொடங்கினார்.

இந்த நிலையில் தான் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்த பேபி ஜான் படம் பெரிய அளவில் தோல்வி பெற்றது.

அட்லிக்கு இதெல்லாம் தேவையா, மண்ணை வாரி தலையில் போட்டுக் கொண்டார் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால் தலைவன் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த முதலீடை போட்டிருக்கிறார். இந்தியாவில் சமீபத்தில் பெரிய அளவில் கவனம் ஈர்த்திருப்பது பிக்கில் பால் போட்டி.

தற்போது வரும் பிப்ரவரியில் பிக்கில் பால் லீக் நடைபெற இருக்கிறது. நடிகை சமந்தா, zomataவின் உரிமையாளர் இந்த விளையாட்டு அணிகளை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

தற்போது அட்லி பெங்களூரு அணியை விலைக்கு வாங்கி பெங்களூரு ஜவான்ஸ் என பெயரிட்டு இருக்கிறார்.

இந்த அணியில் இந்த விளையாட்டை திறமையாக விளையாடக்கூடிய விஷால் தக்காரி மற்றும் சில முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News