Directors Nelson and Atlee: விஜய் என்கிற காந்த சக்தியை எங்கே, எப்பொழுது பயன்படுத்துவது என்று சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தெரிந்து வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நடந்த பொழுது அதில் பேசிய நெல்சன் இந்த படத்தை நான் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் தான் என்று மேடையை அதிரும்படி அவருடைய பெயரை பயன்படுத்தினார்.
அதாவது நான் பீஸ்ட் படத்தை எடுக்கும் பொழுது உன்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது அதை வெளிப்படுத்த வேண்டும் என்றால் நீ கூடிய விரைவில் ரஜினி சாரை வைத்து படத்தை எடுத்தால் உன்னுடைய வெற்றி உனக்கு நிச்சயம் கிடைத்து விடும் என்று எனக்கு நம்பிக்கையை கொடுத்தார்.
Also read: பேராசையில் தளபதி 68 சம்பளத்தில் செக் வைத்த விஜய்.. தலவிதின்னு ஏஜிஎஸ் 200 கோடி கொடுப்பதன் சூழ்ச்சி
அதனால் தான் தற்போது ஜெயிலர் படத்தை என்னால் எடுக்க முடிந்தது என்று இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நெல்சன் பேசியிருந்தார். தற்போது இவரை ஃபாலோ பண்ணி வருகிறார் அட்லீ. அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
இது சம்பந்தமாக நேற்று சென்னையில் தனியார் கல்லூரியில் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ஷாருக்கான், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் அட்லீ மேடையில் பேசிய பொழுது நான் இதுவரை கம்போர்ட் சோனிலே இருந்தேன்.
Also read: கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ
அப்படி இருந்த என்னை தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து படத்தை எடுக்க தூண்டி விட்டவர் என்னுடைய அண்ணன் விஜய் தான் என்று ஜவான் மேடையில் அனைவரது முன்னாடியும் பேசினார். அதுவரை அமைதியாக இருந்த ரசிகர்கள் விஜய் பெயரைக் கேட்டதும் ஆரவாரத்துடன் கூச்சல்கள் இட்டு தொடர்ச்சியாக கைத்தட்டளை கொடுத்து வந்தார்கள்.
என்னதான் வெற்றி இயக்குனர்கள் மற்றும் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அந்த இடத்தில் விஜய் பெயர் எடுத்தால் தான் மாஸாகும், வெற்றி நிச்சயம் என்பதை பலரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஜெயிலர் மற்றும் ஜவான் படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர்கள் ரெண்டு பேருமே விஜய் தான் காரணம் இந்த படத்தை எடுத்ததற்கு என்று கூறியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் விஜய் எல்லா இடத்திலும் ஜொலித்துக் கொண்டு வருகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.