செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

என்னோட அடுத்த ஹீரோ விஜய் சேதுபதி தான்.. மேடையிலேயே அப்டேட் கொடுத்த அட்லி

Vijay Sethupathi: அட்லி இப்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். ஜவான் படத்தின் மிகப்பெரும் வெற்றி அவருக்கான அடையாளமாக அமைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் பேபி ஜான் படம் உருவாகியுள்ளது. தமிழில் விஜய், சமந்தா நடிப்பில் உருவான தெறி ஹிந்தி ரீமேக் தான் இது.

வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கான ப்ரமோஷனில் அட்லி பிஸியாக இருக்கிறார்.

அப்போது ஒரு பிரமோஷனில் அவர் தன்னுடைய அடுத்த படம் பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி அவருடைய அடுத்த ஹீரோ விஜய் சேதுபதி தான் என்பது உறுதியாகி உள்ளது.

மேடையிலேயே அப்டேட் கொடுத்த அட்லி

இதை வெளிப்படையாக கூறியிருக்கும் அட்லி என்னுடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கான வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது.

விரைவில் படம் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்குவார் என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு மிகப்பெரும் பிரேக் கொடுத்த படம் தான் இது. அந்த கூட்டணி மீண்டும் இணைவதில் ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர்.

Trending News